டெல்லியில் மலரும் தாமரை..ஆம் ஆத்மியிடம் ஆட்சியை பறிக்கும் பாஜக.. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக 39 முதல் 45 இடங்களில் வெற்றி பெற்று மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும் என்று ஜேவிசி சார்பில் நடத்தப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வாக்காளர்கள் வரிசையில் நின்று ஓட்டளித்தனர். மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றது.

இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் பிப்ரவரி 8 ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. டெல்லியை பொறுத்தவரை மொத்தம் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 36 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
டெல்லியில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே போட்டி உள்ளது. தேர்தல் முடிவடைந்துள்ளதை தொடர்ந்து இன்று மாலை 6.30 மணிக்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் முடிவுகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் ஜேவிசி சார்பில் கருத்து கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி டெல்லியில் பாஜக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 39 முதல் 45 இடங்களில் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியை கைப்பற்ற 36 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் அதை விட கூடுதல் இடங்களில் பாஜக வெல்லும் என்று இந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நடக்கும் பட்சத்தில் 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பாஜக அரியணை ஏறும்.
அதேபோல் இந்த கருத்து கணிப்பின்படி ஆளும் ஆம் ஆத்மி கட்சி 22 முதல் 31 இடங்களில் மட்டுமே வெல்லும். காங்கிரஸ் கட்சி 0 முதல் 2 இடங்களிலும், மற்றவர்கள் 0 முதல் ஒரு இடத்திலும் வெல்ல வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜேவிசி கருத்து கணிப்பு பாஜகவினருக்கு உற்சாகத்தை தந்துள்ளதோடு, ஆம் ஆத்மி கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.
டெல்லியில் இதற்கு முன்பு தொடர்ந்து 3 முறை ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்தது. கடந்த 2014, 2015, 2020 ஆகிய சட்டசபை தேர்தல்களில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதில் 2014ல் மட்டும் பாஜக - ஆம் ஆத்மி கூட்டணி அமைத்து இருந்தது. ஆனால் அந்த ஆட்சி உடனடியாக கவிழ்ந்தது. அதன்பிறகு 2015, 2020 சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்தது. இப்போது மீண்டும் சட்டசபை தேர்தல் நடந்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications