தமிழ் சித்த மருத்துவத்தின் சாதனை.. குடியரசுத் தலைவர் மாளிகையிலும் இனி கபசுர குடிநீர்.. செம செய்தி!
டெல்லி: இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையில் தற்போது கபசுர குடிநீர் வழங்கும் பணிகள் நடந்து வருகிறது. அங்கு இருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக சித்த மருத்துவம் உருவாக்கிய அற்புதம்தான் கபசுர குடிநீர். இந்த கபசுர குடிநீர் தற்போது தமிழகம் முழுக்க கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மூன்று வேளை சத்தான உணவோடு கபசுர குடிநீரும் வழங்கப்படுகிறது.
இந்த கபசுர குடிநீர் காரணமாக தமிழகத்தில் மக்கள் வேகமாக கொரோனாவில் இருந்து குணமடைகிறார்கள். அதேபோல் தமிழகத்தில் பலி எண்ணிக்கையும் மிகவும் குறைவாகவே இருக்கிறது.

என்ன நிலைமை
இதற்கு எல்லாம் காரணம் கபசுர குடிநீர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கபசுர குடிநீர் மற்ற மாநிலங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் இதை வாங்க பலர் ஆர்வம் தெரிவித்து வருகின்றனர். மத்திய பிரதேசம், டெல்லி, குஜராத் மாநில அரசுகள் இது குறித்து கேட்டு உள்ளது . கபசுர குடிநீர் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியுமா என்று ஆராய்ந்து வருகிறார்கள்.

ஐசிஎம்ஆர் ஆராய்ச்சி
அதேபோல் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமான ஐசிஎம்ஆர் இதை வைத்து ஆராய்ச்சி செய்து வருகிறது. பொது மக்களுக்கு இதை கொடுக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் அடித்தட்டு மக்களுக்கு இது வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் சுகாதார பணியாளர்களுக்கும் இந்த கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. உண்மையில் கபசுர குடிநீர் பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது .

வழங்குகிறார்கள்
இந்த நிலையில்தான் தற்போது இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையில் தற்போது கபசுர குடிநீர் வழங்கும் பணிகள் நடந்து வருகிறது. அங்கு இருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. குடியரசுத் தலைவர் மாளிகையில் இருக்கும் மருத்துவமனைதான் 'ஆயுஷ் வெல்னஸ்' ஆகும். இங்கு அலோபதி, ஆயுர்வேதிக் பிரிவுகள் உள்ளது. இதில் ஆயுர்வேத பிரிவுதான் இந்த மருந்தை வழங்கி வருகிறது.

வழங்குகிறார்கள்
இங்கு நூறுக்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்கள் எல்லோருக்கும் தினமும் இந்த கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. தினமும் காலை மற்றும் மாலையில் இந்த குடிநீர் வழங்கப்படுகிறது. இதற்காக அங்கு தினமும் 8 லிட்டர் வரை கபசுர குடிநீர் தயாரிக்கப்படுகிறது. முறையான ஆலோசனையின் பெயரில் இதை தயாரித்து வருகிறார்கள் .

சரியாக தெரியவில்லை
இந்த கபசுர குடிநீர் அங்கு ஜனாதிபதிக்கு வழங்கப்படுகிறதா என்று உறுதியாக இன்னும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அங்கு இருக்கும் ஊழியர்கள் எல்லோருக்கும் கண்டிப்பாக வழங்கப்படுகிறது. இவர்கள் காலையில் பணிக்கு செல்ல வேண்டும் என்றால் கண்டிப்பாக கபசுர குடிநீர்குடிக்க வேண்டும். அதன்பின் உடல் வெப்பநிலையை சோதித்த பின்பே இவர்கள் பணிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications