காபூல் இரட்டை குண்டுவெடிப்புக்கு காரணமான ஐ.எஸ்.ஐ.எஸ்-கே அமைப்பில் 14 கேரள இளைஞர்கள்? அதிர்ச்சி தகவல்
டெல்லி: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வியாழக்கிழமையன்று நடத்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்புக்கு காரணமாக ஐ.எஸ்.ஐ.எஸ்.-கே அமைப்பில் கேரளாவை சேர்ந்த 14 இளைஞர்கள் இருப்பதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சர்வதேச பயங்கரவாத அமைப்பாக ஐ.எஸ்.ஐ.எஸ். கோலோச்சிய காலத்தில் 2014-ம் ஆண்டில் ஐ.எஸ்.ஐ.எஸ்-கோரசன் மாகாணம் அதாவது ஐ.எஸ்.ஐ.எஸ்.-கே உருவானது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் இந்தியாவில் உள்ள தீவிரவாதிகளைக் கொண்டதாக இந்த அமைப்பு உருவானது.
இந்த பயங்கரவாத இயக்கத்தில் தாலிபான்களிடம் இருந்து பிரிந்தவர்களும் இணைந்தனர். ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு இணையான ஒரு அமைப்பாக ஐ.எஸ்.ஐ.எஸ்.-கே அமைப்பு பார்க்கப்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தை உருவாக்கியது பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. என்பது சர்வதேச நாடுகளின் குற்றச்சாட்டு. ஆனால் பாகிஸ்தான் இதனை திட்டவட்டமாக மறுத்தும் வருகிறது.

ஐ.எஸ்.ஐ.எஸ்.கே விஸ்வரூபம்
கடந்த ஜூன் மாதம் ஹாலோ என்ற இங்கிலாந்து என்.ஜி.ஓ. அமைப்பின் 10 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதும் இந்த அமைப்புதான். ஷியா பிரிவு முஸ்லிம்களின் காபூல் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தி 100க்கும் மேற்பட்டோரை படுகொலை செய்ததும் இந்த ஐ.எஸ்.ஐ.எஸ்..கே அமைப்புதான். ஆப்கானிஸ்தானின் குனார், நாகன்ஹார் மாகாணங்களில் இந்த அமைப்பு வலிமையாக இருக்கிறது. 2020-ம் ஆண்டு காபூல் குருத்வாரா தாக்குதல், காபூல் மகப்பேறு மருத்துவமனை தாக்குதல், ஜலலாபாத் சிறை மீதான தாக்குதல் என தொடர்ந்து கைவரிசைகளை காட்டி வந்தது ஐ.எஸ்.ஐ.எஸ்-கே.

வலிமை குறைந்தது
இந்த இயக்கம் 2019-ல் முழு வீச்சில் செயல்பட்டு மொத்தம் 300க்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்களை நடத்தியது. அந்த கால கட்டத்தில் 8,000 பேர் வரை இந்த இயக்கத்தில் இருந்தனர். ஆனால் படிப்படியாக ஐ.எஸ்.ஐ.எஸ்.-கே-வின் வலிமை குறைந்து போனது. 2020-ம் ஆண்டில் 11 தாக்குதல்களைத்தான் ஐ.எஸ்.ஐ.எஸ்.-கே இயக்கத்தால் நடத்த முடிந்தது. கேரளாவைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்.-கேவில் இருப்பதாக கூறப்பட்டது.
Recommended Video

கேரளா இளைஞர்கள்
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் கைகளுக்கு வந்தது. அப்போதே ஐ.எஸ்.ஐ.எஸ்-கே அமைப்பு தாலிபான்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தக் கூடும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்திருந்தன. இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் காபூலில் இரண்டு தற்கொலைப் படை தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ்.-கே நடத்தியது. இதில் சுமார் 200 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ்.-கேவில் கேரளாவை சேர்ந்த 14 இளைஞர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

என்.ஐ.ஏ. விசாரணை
கேரளாவின் காசர்கோடு, மலப்புரம், கண்ணூர் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள்தான் இந்த இயக்கத்தில் இணைந்துள்ளனர். இவர்களில் ஒருவர் தமது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு நான்ஹார் மாகாணத்தில் இருப்பதாக கூறியதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கேரளாவை சேர்ந்த இந்த இளைஞர்கள் சிலர் குடும்பத்துடன் நான்ஹார் மாகாணத்திலேயே செட்டிலாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த மாகாணம் பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. இந்த இளைஞர்கள் தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications