டெல்லியில் போராடுறவங்க விவசாயிகள் அல்ல.. எல்லாம் பயங்கரவாதிகள்.. முட்டாள்!.. கங்கனா பயங்கர பேச்சு
டெல்லி: டெல்லியில் போராடுபவர்கள் பயங்கரவாதிகள் என சர்ச்சைக்குரிய கருத்தை கூறிய நடிகை கங்கனா ரனாவத் அவர்களுக்கு ஆதரவாக ட்வீட் போட்ட பாப் பாடகி ரிஹான்னாவையும் கடுமையாக சாடியுள்ளார்.
வேளாண் சட்டத்திற்கு எதிராகவும் அதை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் டெல்லியில் 60 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் அது எந்த பலனையும் தரவில்லை.

டிராக்டர் பேரணி
இந்த நிலையில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க கடந்த குடியரசுத் தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டு வீசியும் பேரணியை கலைத்தனர்.

சில மாவட்டங்கள்
இந்த பேரணியால் டெல்லியைச் சுற்றியுள்ள சில மாவட்டங்களில் இன்டர்நெட் போன்ற இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. இதுதொடர்பாக ஆங்கில நாளிதழ் வெளியிட்டிருந்த செய்தியை பார்த்துவிட்டு பாப் பாடகி ரிஹான்னா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

கங்கனா
அதில் நாம் ஏன் இதை பற்றி பேசவில்லை என கேள்வி எழுப்பியிருந்தார். இவரது இந்த பதிவு, அதாவது விவசாயிகளின் போராட்டம் வெளிநாட்டினரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இவருக்கு கங்கனா ரனாவத் ஒரு பதில் கொடுத்துள்ளார். இதற்காக கங்கனாவை பலர் கழுவி கழுவி ஊற்றியுள்ளார்கள்.

பயங்கரவாதிகள்
அவர் கூறுகையில் டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல, அவர்கள் இந்தியாவை பிளவுப்படுத்த முயற்சிக்கும் பயங்கரவாதிகள். இதனால் பாதிக்கப்படக் கூடிய நமது தேசத்தை சீனா கையகப்படுத்தி, அமெரிக்காவைப் போன்ற ஒரு சீன காலனியாக மாற்ற முடியும். முட்டாள்... நாங்கள் உங்களை போல எங்கள் தேசத்தை விற்கவில்லை என கங்கனா தனது ட்விட்டரில் ரிஹான்னாவை விமர்சித்துள்ளார்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications