ஏமாற்றம்.. ஏமாற்றம்.. ஏமாற்றம்.. விவசாயிகளைப் பற்றி பேசாத மத்திய பட்ஜெட்.. கனிமொழி அட்டாக்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சட்டசபைத் தேர்தலால் கூட மத்திய பாஜக அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டை நினைவு கூட வைக்க முடியவில்லை என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட்டை மாற்றம் இல்லாத ஏமாற்றம் என்று கூறியுள்ள கனிமொழி, தமிழ்நாட்டில் பாஜக வெற்றிபெறாது என கருதுவதால் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கிறது. இதனால் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான சிறப்பு திட்டம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பொதிகை மலையேற்றம், ஆதிச்சநல்லூர் கண்காட்சி மையம், கனிம வளங்களுக்கான வழித்தடம், 2 புதிய ரயில் பாதை வழித்தடம் ஆகியவை மட்டுமே அறிவிக்கப்பட்டது.

Kanimozhi

புதிய திட்டமோ, புதிய தொழிற்சாலைகள் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் தமிழ்நாட்டு மக்களை மத்திய பட்ஜெட் ஏமாற்றி இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி பேசுகையில், ஏமாற்றம்.. ஏமாற்றம்.. ஏமாற்றம்.. அதுதான் இந்த பட்ஜெட்.. இதில் திருக்குறளும் இல்லை.. திட்டங்களும் இல்லை. எந்த அடிப்படையும் இல்லாமல், விவசாயிகள் பற்றி பேசாத பட்ஜெட்டாக உள்ளது.

நிதிக்குழு அறிக்கையில் 50 சதவிகித நிதியை மாநில அரசுக்கு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கணக்கில் கூட எடுத்துக் கொள்ளாமல் 41 சதவிகித நிதி என்று நிர்மலா சீதாராமன் அறிவித்திருப்பது மாநிலங்களுக்கு எதிரான ஒன்றாகும். ஜல் ஜீவம் திட்டத்தில் தமிழ்நாட்டிற்கான நிதியை அதிகப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம்.

ஆனால் அதனையும் குறைத்திருக்கிறார்கள். மாநிலங்களுக்கு எதிரான பல்வேறு விஷயங்களை கொண்டிருக்கும் பட்ஜெட். தமிழ்நாட்டிற்கு எந்த நிதியையும் தராமல், நமது அரிய வகை கனிம வளங்களை சுரண்டுவதற்கான திட்டம் தீட்டக் கூடிய பட்ஜெட்டாக உள்ளது. தேர்தலை முன்னிட்டாவது ஏதாவது செய்வார்கள் என்று விரும்பினோம்.

மக்களை இந்த பாஜக அரசு ஏமாற்றி இருக்கிறது. தேர்தல் என்று வரும் போது இதனை எடுத்து பேசுவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும். ஆனால் திமுகவுக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சி முக்கியம். இது தமிழக மக்களுக்கு மிகப்பெரிய அநீதி. பாஜகவுக்கு தமிழக மக்கள் வாக்களிப்பது என்பது என்றுமே நடக்காத ஒன்று. பீகார் தேர்தல் வரும் போது, அது பீகார் பட்ஜெட்டாக இருந்தது.

என்ன செய்தாலும் தமிழ்நாட்டில் நாம் வெற்றிப் பெறப் போவதில்லை. அதனால் தமிழ்நாட்டை கண்டுகொள்ள வேண்டியதில்லை என்பதோடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களையும் பாஜக புறக்கணித்துள்ளது. அரிய வகை கனிம வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் தாரை வார்க்க போகிறார்கள். அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. பட்ஜெட்டில் தமிழ்நாட்டை மறந்தவர்களை, தேர்தலின் போது மக்களும் மறந்துவிடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+