பொங்கல் நாளன்று சி.ஏ தேர்வு.. நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு முழுக்கமிட்ட கனிமொழி எம்பி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பொங்கல் திருநாளன்று சி.ஏ தேர்வு வைக்கப்பட்டுள்ளதாக அட்டவணை வெளியாகியிருந்தது. இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் திமுக எம்பி கனிமொழி, இன்று நாடாளுமன்றத்தில் இந்த கோரிக்கையை எழுப்பி ஒத்திவைப்பு தீர்மானத்தை முன்வைத்திருக்கிறார்.

தமிழர்களின் பண்டிகை நாட்களில் தொடர்ச்சியாக தேர்வுகள் வைக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதற்கு எதிராக குரல்கள் எழும்போது மத்திய அரசு தேர்வு நாட்களை மாற்றி அறிவித்திருக்கிறது. ஆனாலும் மீண்டும் மீண்டும் இதே பிரச்னை எழுந்து வருகிறது. இந்த முறை, சி.ஏ தேர்வு பொங்கல் நாளன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது பட்டய கணக்காளர் பணிகளுக்கு ஜனவரி 14 மற்றும் 16ம் தேதி தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

kanimozhi mp ca exam dmk

இந்த அறிவிப்பு உடனடியாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மட்டுமல்லாது தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், ஐசிஏஐ தலைவர் சி.ஏ.ரஞ்சித் குமார் அகர்வாலுக்கும் கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தில்,

“சிஏ பவுண்டேஷன் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களின் பெற்றோர் பலர் என்னை தொடர்பு கொண்டனர். தமிழ்நாட்டின் மக்கள் திருவிழாவான பொங்கல் (14.1.2025) அன்றும், உழவர் திருநாள் (16.1.2025) அன்றும் முறையே Business laws மற்றும் Quantitative Aptitude தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. துர்கா பூஜை, ஹோலி, பண்டிகை, தீபாவளி பண்டிகைக்கு நிகரானது தமிழக மக்களுக்கு பொங்கல் பண்டிகை.

அறுவடை திருநாளான பொங்கல் திருவிழா என்பது தமிழ்நாட்டின் தனித்துவமிக்க பண்பாட்டு திருவிழா என்பதை கருத்தில் கொண்டு, தேர்வர்களுக்கு சிரமங்களின்றி இந்த தேர்வுக்கான அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

மேலும், இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பொங்கல் திருநாளன்று தேர்வுகள். எத்தனை முறை சொன்னாலும் திருந்தப்போவதில்லை. அதற்காக நாம் ஓயப்போவதும் இல்லை. ஒன்றிய அரசே தேர்வு தேதியை உடனே மாற்று. தமிழ் பண்பாட்டை அவமதிக்கும் செயலை கைவிடு” என்று குறிப்பிட்டுள்ளார்.

திமுக தலைவர்கள் பாஜக தமிழக விரோதத்துடன் செயல்படுகிறது என்று விமர்சித்திருந்தனர். ஆனால் மத்திய அரசு, தமிழக விரோத எண்ணத்துடன் நடந்துக்கொள்ளவில்லை என பாஜக விளக்கமளித்திருந்தது. தமிழக பாஜகவின் மாநில செயலாளர்களில் ஒருவரான எஸ்.ஜி.சூர்யா, “தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை, மகர சங்கராந்தியாகும், வடக்கில் லோஹ்ரியாகவும், உத்தரப் பிரதேசத்தில் கிச்டியாகவும், குஜராத் & ராஜஸ்தானில் உத்தராயணியாகவும், ஹரியானா & பஞ்சாப் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பிஹு எனவும் கொண்டாடப்படுகிறது.

எனவே பொங்கல் என்பது தமிழ்நாட்டு மட்டுமின்றி இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஒரு தேசிய பண்டிகையாகும். அப்படியெனில் பாஜக மொத்த தேசத்திற்கும் எதிரானாதா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதனை நிர்மலா சீதாராமன் தனது x தளத்தில் பகிர்ந்து, “சரியாகவும், விளக்கமாகவும் பதில் சொல்லியிருக்கீங்க சூர்யா அவர்களே. எதில பார்த்தாலும், எப்ப பார்த்தாலும் “தமிழ் விரோதி” ப்ரசாரம் சிலருக்கு பழக்கமாகிவிட்டது போலும்” என்று கூறியிருந்தார்.

இப்படி இருக்கையில் இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் கூட்டத்தில், பொங்கல் நாளன்று சி.ஏ தேர்வு தேதி முடிவெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸை நாடாளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி கொடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+