லோக்சபா தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடு – உபியில் எத்தனை தொகுதிகள் அதிகரிக்கும்? சாடிய கபில் சிபல்
டெல்லி: தற்போது 543 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதனை 850 ஆக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான சட்ட முன்வடிவு பற்றி விவாதிக்க ஏப்ரல் 16, 17, 18 ஆகிய தேதிகளில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இந்நிலையில் தான் 2029ல் ஆட்சியை பிடிக்க பாஜக இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளதாக ராஜ்யசபா எம்பி கபில் சிபல் சாடியுள்ளார். அதுமட்டுமின்றி தமிழகம், உத்தர பிரதேசத்தில் எத்தனை தொகுதிகள் அதிகரிக்கப்படும்? இதனால் 2029 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எப்படி பலன் பெறும்? என்பதை அவர் விளக்கி மத்திய அரசை சாடியுள்ளார்.
மத்திய அரசு லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதற்கான நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தான் லோக்சபா எம்பிக்களின் எண்ணிக்கையை தற்போதுள்ள 543ல் இருந்து 850 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.

இதற்கான சட்ட முன்வடிவு தயாராகி உள்ளது. இதுபற்றி விவாதிக்க ஏப்ரல் 16, 17, 18 ஆகிய 3 தேதிகளில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்த சட்ட முன்வடிவின் அடிப்படையில் மாநிலங்களில் 815 லோக்சபா எம்பிக்களும், யூனியன் பிரதேசங்களில் இருந்து 35 எம்பிக்களும் மக்களால் நேரடியாக தேர்வு செய்ய முடியும்.
முதல்வர் ஸ்டாலின் வார்னிங்
இந்நிலையில் தான் மத்திய அரசின் தொகுதி மறுவரையறை முடிவுக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதாவது பாஜக தான் செல்வாக்காக இருக்கும் வடமாநிலங்களில் அதிக தொகுதிகளை உருவாக்கி தென்மாநிலங்களின் உதவி இன்றி மத்தியில் ஆட்சியை பிடிக்கும் முயற்சி தான் இந்த தொகுதி மறுவரையறை என்று முதல்வர் ஸ்டாலின் உள்பட பல தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழகத்தில் கடும் போராட்டம் நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் வார்னிங் செய்துள்ளார்.
கபில் சிபல் கடும் எதிர்ப்பு
இந்நிலையில் தான் லோக்சபா தொகுதிகளின் தொகுதி மறுவரையறைக்கு ராஜ்யசபா எம்பியும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது: ''2029 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக பாஜகவுக்கு சாதகமாக தொகுதிகளை மறுவரையறை செய்வதே மத்திய அரசின் நோக்கம். இத்தகைய முன்மொழிவை எதிர்க்கட்சி எம்பிக்கள் உடனடியாக நிராகரிக்க வேண்டும்.
பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்துவதில் அரசுக்கு உண்மையில் அக்கறையில்லை. ஏனென்றால் தற்போதுள்ள 543 லோக்சபா தொகுதிகளுக்குள்ளேயே பெண்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்கும் ஒரு மசோதாவைக் கொண்டு வர வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை.
ஆதாயமின்றி பாஜக செய்யாது
அதோடு பாஜக அரசியல் ஆதாயமின்றி எதையும் செய்வதில்லை. அரசியல் பலன் இல்லை என்றால் அவர்கள் மசோதாவை கொண்டு வர மாட்டார்கள். பெண்கள் இட ஒதுக்கீட்டு சட்டம் 2026க்குப் பிறகு, மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதிகள் மறுவரையறைக்கு பின் அமல்படுத்தப்படும் என்று 106வது அரசியல் சாசன திருத்த மசோதா 334-A கூறுகிறது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால், இப்போது அரசு அதைத் திருத்த முடிவு செய்துள்ளது. என்ன மாற்றம் செய்யப்பட உள்ளது என்று அவர்கள் கூறவில்லை.
தமிழ்நாடு - உபி ஒப்பீடு
தமிழ்நாட்டில் லோக்சபா தொகுதிகள் தற்போது 39 ஆக உள்ளன. தொகுதி மறுவரையறைக்கு பிறகு இது 59 ஆக உயரும். அதேவேளையில் உத்தரபிரதேசத்தில் உள்ள லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை 80ல் இருந்து 120 ஆக அதிகரிக்கும். தற்போது உத்தர பிரதேசம், தமிழ்நாடு இடையே உள்ள லோக்சபா தொகுதிகளின் வித்தியாசம் 41 ஆக உள்ளது.
ஆனால் தொகுதி மறுவரையறைக்கு பின்னால் இந்த வித்தியாசம் 61 ஆக அதிகரிக்கும். இதனால் வடமாநிலங்களில் அதிக தொகுதிகளை கைப்பற்றி பாஜக வெற்றி பெற முடியும். வடமாநிலங்களில் 238 தொகுதிகளில் 127 இடங்களை வென்ற பாஜகவுக்கு, தென்னிந்தியாவில் 130 தொகுதிகளில் 29 மட்டுமே கிடைத்தது. இப்போது வடமாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது என்பது பாஜகவுக்கு ஆதாயம் அளிக்கும்
மேற்கு வ ங்க தேர்தலை குறிவைத்து
மேலும் தற்போதைய இந்த நகர்வு என்பது மேற்கு வங்கத் தேர்தல்களை இலக்காக கொண்டுள்ளது. மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாட்டில் தற்போது சட்டசபை தேர்தல் பிரசாரம் நடக்கும் நிலையில் ஏப்ரல் 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை மத்திய அரசு கூட்டி உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளின் எம்பிக்கள் அங்கே பிரச்சாரம் செய்வார்களா அல்லது இங்கே வருவார்களா? ஏப்ரல் 29ம் தேதிக்கு பிறகு இந்த கூட்டத்தொடரை அறிவித்து இருக்கலம்.
2029 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதே பாஜகவின் அரசியல் நோக்கமாக உள்ளது. அதோடு சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரின் நோக்கம் என்பது மேற்கு வங்கத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியாக செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்க தேர்தலில் பாஜக வெற்றி பெற வாய்ப்பில்லை என்பது தெரியும். ஆனாலும் தேர்தலை சீர்க்குலைக்க விரும்புகிறார். தொகுதி மறுவரையை ஆணையத்தை பாஜக கட்டுப்படுத்துகிறது. ஜம்மு காஷ்மீர் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் நடந்த தொகுதி மறுவரையறை அடிப்படையில் இதனை நாம் உறுதி செய்யலாம்'' என சாடியுள்ளார்.
-
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!













Click it and Unblock the Notifications