கர்நாடகாவில் மே 10ம் தேதி வாக்குப் பதிவு, 13ம் தேதி ஓட்டு எண்ணிக்கை.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு
டெல்லி: கர்நாடக சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு மே 10ஆம் தேதி நடக்கும் என்றும், தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ஆம் தேதி எண்ணப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் ஏப்ரல் 13ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
இதனால் பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. அரசியல் கட்சி தலைவர்கள் கர்நாடகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கட்சிகள் தீவிர பிரச்சாரம்
பாஜக சார்பில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் அடுத்தடுத்து கர்நாடகாவுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, டி.கே.சிவக்குமார், சித்தராமையா ஆகியோரும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று மக்கள் ஆதரவை திரட்டி வருகிறார்கள்.

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
இதனிடையே அண்மையில் காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 124 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்ட நிலையில், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா வருணா தொகுதியிலும், கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் கனகபுரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

தேர்தல் எப்போது?
224 சட்டசபை தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் 5.21 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தற்போது கர்நாடகாவில் 119 எம்எல்ஏ-க்களுடன் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அதேபோல் காங்கிரஸ் கட்சிக்கு 75 எம்எல்ஏ-க்களும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 28 எம்எல்ஏ-க்களும் உள்ளனர். இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை கொடுத்தது.

ராஜீவ் குமார் பேட்டி
இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறுகையில், கர்நாடக சட்டசபை பதவிக்காலம் மே 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. கர்நாடகாவில் 12.15 லட்சம் வாக்காளர்கள் 80 வயதுக்கு மேலாகவும், 16,976 வாக்காளர்கள் நூறு வயதை கடந்தவர்களாகவும் உள்ளனர். மொத்தம் உள்ள 5.21 கோடி வாக்காளர்களில் 2.62 கோடி ஆண் வாக்காளர்களும், 2.59 கோடி பெண் வாக்காளர்களும் உள்ளனர்.

புதிய வாக்காளர்கள் எவ்வளவு?
நடப்பாண்டு ஏப்ரல் 1ஆம் தேதியோடு 18 வயது பூர்த்தியடையும் அனைவரும், சட்டசபை தேர்தலில் வாக்களிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில் 9.17 லட்சம் புதிய வாக்காளர்கள் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்படும். கர்நாடகாவில் மொத்தமாக 173 பொதுத்தொகுதிகளும், 36 தனி தொகுதிகளும், 15 பழங்குடியின தொகுதிகளும் உள்ளது.

வாக்கு எண்ணிக்கை எப்போது?
கர்நாடக சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு மே10ல் ஒரே கட்டமாக நடக்க உள்ளது. சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஏப்ரல் 13ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் தொடங்கப்படும் என்றும், வேட்புமனுத்தாக்கல் ஏப்ரல் 20ஆம் தேதியுடன் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 21ஆம் தேதியும், வேட்புமனுவை திரும்பப்பெற ஏப்ரல் 24ஆம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications