ஹை அலர்ட்.. கர்நாடகா CM கன்பார்ம்! சித்தராமையா வீட்டில் உச்சக்கட்ட பாதுகாப்பு -அணிவகுக்கும் பேனர்கள்
டெல்லி: கர்நாடகா மாநில முதலமைச்சர் தேர்வு தொடர்பாக டிகே சிவகுமார் ஆகியோரிடம் விடிய விடிய பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் சித்தராமையாவை அடுத்த முதலமைச்சராக காங்கிரஸ் தலைமை தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அவரது வீட்டு வாசலில் தொண்டர்கள் பேனர்களுடன் குவிந்து வருகிறார்கள்.
கர்நாடகா மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 6 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், அடுத்த முதலமைச்சர் யார் என்பதை காங்கிரஸ் கட்சி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. கர்நாடகா மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கும் டிகே சிவக்குமாருக்கும் இடையே அடுத்த முதலமைச்சர் யார் என்ற போட்டி தொடர்ந்து வருகிறது.

சித்தராமையா மற்றும் டிகே சிவகுமாரிடம் இது தொடர்பாக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் ஆலோசனை மேற்கொண்டனர். முடிவில் கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சராக சித்தராமையாவையே கட்சித் தலைமை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
உடனே கர்நாடகா மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான ரந்தீப் சிங் சுர்ஜேவாலா நேற்று இது தொடர்பாக அளித்த விளக்கத்தில்,
"கர்நாடகா மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான அதிகாரத்தை தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் வழங்கி இருக்கிறது.
மல்லிகார்ஜுன கார்கே முதலமைச்சரின் பெயரை அறிவிப்பார். இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதால் இன்று அல்லது நாளை அறிவிப்புகள் வெளியாகலாம். கர்நாடகாவில் முதலமைச்சர் யார் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை." என அவர் கூறினார். இதனை தொடர்ந்து நேற்று காங்கிரஸ் தலைவர்களுடன் விடிய விடிய டிகே சிவக்குமார் சந்தித்து பேசினார்.
மல்லிகார்ஜுன கார்கே, வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்கள் நள்ளிரவிலும் டிகே சிவகுமாரிடம் டெல்லியில் ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். இதன் முடிவில் சித்தராமையாவை முதலமைச்சராக அறிவிக்க சிவகுமார் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து விரைவில் சித்தராமையாவை முதலமைச்சராகவும், சிவகுமாரை துணை முதலமைச்சராகவும் காங்கிரஸ் தலைமை அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ள சித்தராமையாவின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் அவரது ஆதரவாளர்களும் காங்கிரஸ் தொண்டர்களும் சித்தராமையா வீட்டு வாசலில் குவிந்து வருகின்றனர். மேலும் அவரது வீட்டுக்கு அருகாமையில் ஏராளமான பேனர்களும் வைக்கப்பட்டு உள்ளன.

கடந்த மே 10 ஆம் தேதி கர்நாடகாவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. முடிவுகள் மே 13 ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. இதில் 136 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று பெரும்பான்மை பலத்துடன் பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான அதிகாரம் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஒருமனதாக வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து காங்கிரஸ் தலைமை அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்கள், சித்தராமையா மற்றும் டிகே சிவகுமாரை டெல்லிக்கு பேச்சுவார்த்தைக்கு வர அழைத்தது. கடந்த மே 15 ஆம் தேதி சித்தராமையா தனது ஆதரவாளர்களுடன் டெல்லிக்கு சென்று தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதேபோல் 16 ஆம் தேதி டிகே சிவகுமாரும் டெல்லிக்கு சென்று பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டார்.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications