இறுதியாக வென்ற மேலிடம்.. கார்கேவை ஒன்றாக சந்தித்த சித்தராமையா-டிகே சிவக்குமார்! போட்டோவ பாருங்க!
டெல்லி: கர்நாடாகா முதல்வர் பதவி விவகாரத்தில் கடந்த 2 நாட்களாக எதிரெதிர் துருவங்களாக மாறிப்போன சித்தராமையா, டிகே சிவக்குமார் ஆகியோர் இன்று மல்லிகார்ஜூன கார்கேவை ஒன்றாக சந்தித்து கொண்டனர். கடந்த 2 நாட்களாக டிகே சிவக்குமார், சித்தராமையா ஆகியோர் நேரில் சந்திக்காமல் இருந்து வந்த நிலையில் இன்று திடீரென மனமாற்றம் நடந்ததன் பின்னணி என்ன? என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் பதவிக்கு மாஜி முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது. இருவரும் டெல்லியில் முகாமிட்டு மேலிட தலைவர்களை சந்தித்தனர். இருவரும் முதல்வர் பதவியை விட்டு கொடுக்க முன்வராததால் கடந்த 2 நாட்களால் காங்கிரஸ் கட்சியில் பெரிய குழப்பம் ஏற்பட்டது.

இந்நிலையில் தான் நேற்று நள்ளிரவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் நியமிக்கப்பட்டனர். முதல்வர் பதவி கிடைக்காமல் அதிருப்தியில் இருந்த டிகே சிவக்குமாரை கட்சி மேலிட தலைவர்கள் சமாதானம் செய்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் மே 20ம் தேதி பெங்களூர் கன்டீரவா மைதானத்தில் பதவியேற்க உள்ளனர்.
இந்நிலையில் தான் டிகே சிவக்குமார், சித்தராமையா ஆகியோர் இன்று டெல்லியில் காங்கிரஸ் மேலிட தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை நேரில் சந்தித்தனர். இவர்கள் 2 பேரும் கடந்த 2 நாட்களாக டெல்லியில் இருந்தாலும் கூட சித்தராமையா, டிகே சிவக்குமார் ஆகியோர் ஒருவரையொருவர் நேரில் சந்திக்கவில்லை. இந்நிலையில் தான் இருவரும் இன்று கார்கேவை நேரில் சந்தித்தனர்.
மேலும் எங்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு எதுவுமில்லை. நாங்கள் இருவரும் ஒன்றாக தான் இருக்கிறோம் என்பதை காட்டும் வகையில் அவர்கள் மல்லிகார்ஜூன கார்கேவை ஒன்றாக சந்தித்தனர். இதையடுத்து மல்லிகார்ஜூன கார்கே இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஒற்றுமைமையை வெளிக்காட்டும் வகையில் மல்லகார்ஜூன கார்கே, டிகே சிவக்குமார், சித்தராமையா ஆகியோர் ஒன்றாக கைகளை உயர்த்தி போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.
இதன்மூலம் கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்? என்பதில் கடந்த 2 நாட்களாக நிலவி வந்த குழப்பம் இன்று முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து இன்று டெல்லியில் இருந்து கர்நாடகா வரும் சித்தராமையா, டிகே சிவக்குமார் ஆகியோர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இந்த கூட்டம் இன்று மாலை 6.30 மணிக்கு பெங்களூரில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் சட்டசபையின் காங்கிரஸ் குழு தலைவராக (முதல்வர்) சித்தராமையாவை, டிகே சிவக்குமார் அறிவிக்க உள்ளார். அதன்பிறகு அவர்கள் ஆட்சியமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை கோர உள்ளனர். இதையடுது்து 20ம் தேதி பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications