நான்தான் டாப்பு.. எனக்கு சமம் யாரு.. காங்கிரஸ் மேலிடத்திடம் டி.கே.சிவகுமார் நேரிலேயே எச்சரிக்கை
டெல்லி: கர்நாடகாவில் தமக்கு இணையாக கூடுதல் துணை முதல்வர்களை நியமிக்கவே கூடாது என காங்கிரஸ் மேலிடத்தில் துணை முதல்வர் டிகே சிவகுமார் நேரில் வலியுறுத்தி இருக்கிறார் என்கின்றன தகவல்கள். அத்துடன் முதல்வர் சித்தராமையா ஆதரவு அமைச்சர்கள் காங்கிரஸ் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி தன்னிச்சையாக செயல்படுவதாகவும் டெல்லி மேலிடத்தில் துணை முதல்வர் டிகே சிவகுமார் புகார் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களில் வென்றது. அப்போதே முதல்வர் பதவிக்கு சித்தராமையா- டிகே சிவகுமார் இடையே பெரும் போட்டி இருந்தது. அப்போது தலையிட்ட டெல்லி மேலிடம், சித்தராமையா- டிகே சிவகுமார் இருவரும் இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்ளலாம் என அறிவுறுத்தி சுமூகத் தீர்வை உருவாக்கியது.

தற்போது டிகே சிவகுமார் தரப்பு, முதல்வர் பதவியை நோக்கி காய்களை நகர்த்தி வருகிறது. டிகே சிவகுமாருக்கு ஆதரவாக ஒக்கலிகா ஜாதி மடாதிபதி அரசு விழாவிலேயே சித்தராமையா முன்னிலையிலேயே முதல்வர் பதவியை டிகே சிவகுமாருக்கு விட்டுத்தர வலியுறுத்தியது பெரும் சர்ச்சையானது. இன்னொரு பக்கம் டிகே சிவகுமார் பலத்தைக் குறைக்க அவருக்கு இணையாக கூடுதல் துணை முதல்வர்களை நியமிக்க வேண்டும் என சித்தராமையா ஆதரவு அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கர்நாடகா காங்கிரஸ் அரசானது சித்தராமையா ஆதரவு அமைச்சர்கள், டிகே சிவகுமார் ஆதரவு அமைச்சர்கள் என இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது.
இந்த பின்னணியில் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை நேற்று டிகே சிவகுமார் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது துணை முதல்வர்களை ஒருபோதும் நியமிக்க கூடாது; அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரித்தாராம் டிகே சிவகுமார். மேலும் சித்தராமையா ஆதரவு அமைச்சர்கள் திட்டமிட்டே காங்கிரஸ் கட்சியிலும் ஆட்சியிலும் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் மல்லிகார்ஜூன கார்கேவிடம் டிகே சிவகுமார் புகார் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. டிகே சிவகுமாரின் இந்த புகாரால் சித்தராமையா ஆதரவு அமைச்சர்கள் கடும் கொந்தளிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications