10 நாள் டெல்லி டூர்! சிதம்பரத்துடன் பஃப்பே உணவு! கை நிறைய பரிசு! நிர்வாகிகளை கவனித்த கார்த்தி!
டெல்லி: சிவகங்கை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகளை 10 நாள் பயணமாக டெல்லிக்கு சுற்றுலா அழைத்துச் சென்ற கார்த்தி சிதம்பரம் எம்.பி. அவர்களை செமையாக கவனித்து ஊருக்கு ரயில் ஏற்றிவிட்டுள்ளார்.
டெல்லியில் நாடாளுமன்றம், தாஜ்மஹால், செங்கோட்டை என பல்வேறு இடங்களுக்கு காங்கிரஸ் நிர்வாகிகளை அழைத்துச் சென்று சுற்றிக்காட்டிய கார்த்தி சிதம்பரம் அவர்களுக்கான பயணச் செலவு, தங்குமிடம், சாப்பாடு உள்ளிட்ட சுற்றுலா செலவை முழுமையாக ஏற்றுக்கொண்டார்.

தனது தந்தை ப.சிதம்பரத்துடன் சிவகங்கை, மானாமதுரை தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகளை பஃப்பே உணவு சாப்பிட வைத்த கார்த்தி சிதம்பரம், நிர்வாகிகளுக்கு டிரை ப்ரூட்ஸ் அடங்கிய கண்டெயினர் பாக்ஸ்கள் மற்றும் டிராவல் பேக் ஒன்றையும் பரிசாக கொடுத்திருக்கிறார்.
இதன் மூலம் கார்த்தி சிதம்பரம் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் சிவகங்கை தொகுதியில் போட்டியிடுவார் என்பது தெரிய வருகிறது. இதனால் தான் தனது தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகளை அவர் குஷிபடுத்தி வகையில் இவ்வாறு கவனித்திருக்கிறார் எனக் கருதத் தோன்றுகிறது.

கடந்த 4 ஆண்டுகளாக விட்டுவிட்டு பதவிக்காலம் முடியவுள்ள கடைசி ஆண்டில் காங்கிரஸ் நிர்வாகிகளை டெல்லிக்கு சுற்றுலா அழைத்துச் சென்றிருப்பதன் மூலம் அதிருப்திகளை சரி செய்ய முடியும் என நம்புகிறார் கார்த்தி சிதம்பரம். தேர்தல் பணிகளில் நிர்வாகிகள் சுணக்கம் காட்டக்காட்டக் கூடாது என்பதால் தான் இந்த சிறப்பு கவனிப்பு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதனிடையே 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்திருப்பது கவனிக்கத்தக்கது. ஏனெனில் கடந்த காலங்களில் கார்த்தி சிதம்பரம் பேசிய பல்வேறு கருத்துக்கள் திமுக தலைமையை டென்ஷன் ஆக்கியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications