கார்த்திக் சிதம்பரத்திற்கு நெருக்கடி! CBI விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு! ரவுண்டு கட்டிய நீதிமன்றம்
டெல்லி: சீன நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு சட்டவிரோதமாக விசா வழங்க, லஞ்சம் பெற்ற வழக்கில் கார்த்திக் சிதம்பரத்திற்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இந்த வழக்கு குறித்து சிபிஐ நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்த விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க, கார்த்திக் சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தார். இந்த வழக்கு குறித்து உயர்நீதிமன்றம் கொடுத்த உத்தரவு கவனம் பெற்றிருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரத்திற்கு எதிரான, சிபிஐ சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருக்கிறது.

கீழமை நீதிமன்றம், தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய உத்தரவிட்டதற்கு எதிராக, கார்த்தி சிதம்பரம் தொடர்ந்து மேல்முறையீட்டு மனு மீது சிபிஐ பதிலளிக்கவும் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.












Click it and Unblock the Notifications