டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாடாளுமன்றத்தில் கால் வைத்த கரூர் புயல்.. பொறுத்திருந்து பார்ப்போம் ஜோதிமணி செயலை!

Google Oneindia Tamil News

Recommended Video

    TN MP's: காத்திருக்கும் புதிய எம்பிக்கள்.. நம்பிக்கையில் தமிழகம்!- வீடியோ

    டெல்லி: அப்பாடா.. ஒருவழியா பார்லிமென்ட்டில காலை வெச்சுட்டார் நம்ம கரூர் எம்பி ஜோதிமணி!

    கரூர் என்றாலே கண் முன் வந்து நிற்பவர்கள் தம்பிதுரையும், ஜோதிமணியும்தான். இருவரும் ஒரே சமூகம்.. எப்போதும் ஏழாம் பொருத்தம்!

    ஆனால் ராகுலுடன் நன்மதிப்பை பெற்றவர்தான் ஜோதிமணி. ஜோதிமணிக்கு சீட் தர போகிறார்கள் என்றபோதே, காங்கிரசுக்குள் எதிர்ப்பு கிளம்பியதுடன் உள்ளடி வேலைகளும் நடக்க ஆரம்பித்தது.

    ஜோதிமணி

    ஜோதிமணி

    இதற்கு காரணம், 2 முறை நின்று தோற்று போய்விட்டார், அதுவும் அதே வேட்பாளரிடமே தோற்றிருக்கிறார், அதனால் சென்டிமென்ட் பார்த்து இந்த முறை ஜோதிமணி வேண்டாம் என்று கொக்கி போட்டார்கள் உள்ளூர் காங்கிரஸார்! ஒன்றும் வேலைக்காகவில்லை.. ஜோதிமணியின் உழைப்பு, கட்சி மீதுள்ள தீவிரம், தலைமையிடம் காட்டும் விசுவாசம் அவருக்கு மீண்டும் சீட் தந்தது.

    செந்தில் பாலாஜி

    செந்தில் பாலாஜி

    கட்சிக்குள் தந்த உள்ளடி பிரச்சனை பிறகு எதிர்க்கட்சிகளிடம் இருந்து ஆரம்பித்தது. நிம்மதியாக பிரச்சாரம் செய்யக்கூட விடவில்லை. நிறைய நெருக்கடி.. அதிகார ஆளுமை.. செந்தில் பாலாஜி பக்கத்தில் வந்து நின்ற பிறகுதான் எதிர்தரப்பு அடங்கியது!

    கூட்டணி தர்மம்

    கூட்டணி தர்மம்

    கிராமம் கிராமமாக, வீடு வீடாக மட்டுமில்லாமல் தனி தனி நபர்களை சென்று சந்தித்தார். மக்களின் பாசத்தை எளிதாக அள்ளினார். அபார வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்றதும் இல்லாமல், செந்தில் பாலாஜியின் வெற்றிக்காக நாள்தோறும் வாக்கு சேகரித்து, கூட்டணி தர்மத்தையும் காப்பாற்றினார். இது இன்றைய மூத்த தலைவர்களிடம் கூட காணாத அருமையான குணம்! இப்போது இவர் எம்பியாகி விட்டார். ஜோதிமணியின் நீண்ட நாள் கனவு, பலித்துள்ளது.

    போட்டோ

    2 முறை தோற்ற வலி, சென்ட்டிமென்ட் பார்த்து இந்த முறை சீட் தர வேண்டாம் என்று சொன்ன சொந்த கட்சியினரின் வார்த்தைகளை தாண்டி, ஜோதிமணி இன்று ஜெயித்து காட்டியுள்ளார். இப்போது, பார்லிமென்ட்டில் காந்தி தாத்தா சிலைக்கு பக்கத்தில், தெலுங்கான காங்கிரஸ் எம்பி ரேவந்த் ரெட்டியுடன் சேர்ந்து ஒரு போட்டோ எடுத்து கொண்டுள்ளார்.

    இட ஒதுக்கீடு

    இட ஒதுக்கீடு

    இனிதான் ஜோதிமணியின் சிறப்பாக அவையில் சிறப்பாக இருக்கும். இந்த நேரத்தில் நாம் ஒரு விஷயத்தை நினைவுகூர வேண்டி உள்ளது. சில தினங்களுக்கு முன்பு, "பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கு காங்கிரஸ் அளித்துள்ள ஆதரவு துரதிர்ஷ்டவசமானது" என்று தன் எதிர்ப்பினை பகிரங்கமாக பதிவு செய்தார் ஜோதிமணி.

    செயல்பாடுகள்

    செயல்பாடுகள்

    ஒரே கட்சியில் இருந்து கொண்டு ஜோதிமணியின் இந்த விமர்சனம் துணிச்சலானது. தைரியம் மிக்கது. இது ஒன்று போதும் ஜோதிமணியின் செயல்பாடுகள் இனி நாடாளுமன்றத்தில் எப்படி ஒலிக்க போகிறது என்பதை அறிவதற்கு! ஆல் தி பெஸ்ட் டூ கரூர் எம்பி!

    English summary
    Jothimani became a MP after many challenges. It is believed that she will give voice for Tamil Nadu welfare
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X