சிபிஐ அலுவலகத்திற்கு சென்ற விஜய்.. 2வது நாளாக இன்று விசாரணைக்கு ஆஜர்.. கிடுக்கிப்பிடி போடும் சிபிஐ!
டெல்லி: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் இன்று 2-வது முறையாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராகிறார். இதற்காக தனி விமானத்தில் நேற்றே டெல்லி சென்றார் விஜய். சற்று நேரத்தில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகிறார் தவெக தலைவர் விஜய்.
அங்கு சிபிஐ அதிகாரிகளின் கேள்விகளுக்கு விஜய் பதிலளிக்க இருக்கிறார்.
கரூரில் தவெக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர். நிர்மல்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் சுமார் 20 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. கரூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது.

இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகுமாறு தவெக தலைவர் விஜய்க்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்பேரில், கடந்த 12 ஆம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ தலைமைஅலுவலகத்தில் ஆஜரான விஜய்யிடம் அதிகாரிகள் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது, 100-க்கும் மேற்பட்ட கேள்விகளை அதிகாரிகள் எழுப்பினர். அவர் அளித்த பதில்களை எழுத்துப் பூர்வமாகவும், வீடியோவாகவும் அதிகாரிகள் பதிவு செய்துகொண்டனர்.
குறிப்பாக, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக திட்டமிடப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன? இதுதொடர்பாக காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் என்னென்ன தகவல்கள் பரிமாறப்பட்டன? 10 ஆயிரம் பேருக்கு அனுமதி வாங்கப்பட்ட நிலையில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டதா? திட்டமிட்ட நேரத்தைவிட சுமார் 7 மணி நேரம் தாமதமாக வந்தது ஏன்? என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி விஜய்யிடம் பதில்களை பெற்றுள்ளனர்.
எனினும், விசாரணை முடிவடையவில்லை. விசாரணைக்கு விஜய் முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் தகவல் வெளியானது. விஜய்யின் வேண்டுகோளை ஏற்று, பொங்கல் பண்டிகை முடிந்து மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, ஜன.19 ஆம் தேதியான இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியது.
இதை ஏற்று, நேற்று மாலை 4 மணிக்கு தனி விமானம் மூலம் தவெக தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அவர் இன்று காலை 11 மணிக்கு ஆஜராகிறார். டெல்லியில் தங்கியுள்ள நட்சத்திர ஹோட்டலில் இருந்து சிபிஐ அலுவலகத்திற்கு புறப்பட்டார் விஜய்.
இன்னும் சற்று நேரத்தில் சிபிஐ அதிகாரிகள் முன்பாக ஆஜராக இருக்கிறார். அவரிடம் கேட்க உள்ள கேள்விகள் பட்டியலை அதிகாரிகள் தயாராக வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விசாரணை முடிந்து இன்று இரவு சென்னை திரும்ப விஜய் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
கரூர் துயரச் சம்பவத்தின்போது சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.யாக இருந்த ஜோஷி நிர்மல் குமார் ஆகியோரிடமும் கடந்த வாரம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களிடமும் 2-வது முறையாக இன்றும் விசாரணை நடத்த உள்ளதாக தெரிகிறது. விஜய்யின் ஆலோசகரும், தவெக வியூக வகுப்பாளருமான ஜான் ஆரோக்கிய சாமிக்கும் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அவரும் இன்று விஜய்யுடன் விசாரணைக்கு ஆஜராகிறார்.
-
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications