இது முதல்படிதான்.. இனிமேல் பாருங்க.. காஷ்மீர் பிரச்சனையில் விஸ்வரூபம் எடுக்கும் ஷேலா ரஷீத்!
ஜம்மு காஷ்மீரில் 370 சிறப்பு அதிகார சட்டம் நீக்கப்பட்டது தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
Recommended Video
டெல்லி: ஜம்மு காஷ்மீர் பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு முதல்படிதான், எங்கள் போராட்டம் தொடரும் என்று ஷேலா ரஷீத் குறிப்பிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் 370 சிறப்பு அதிகார சட்டம் நீக்கப்பட்டது தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. மொத்தம் 14 மனுக்கள் மீதான விசாரணை இன்று நடந்தது.
இதில் வழக்கறிஞர் எம். எல். சர்மா, ஷேலா ரஷித், ஷா பசல் ஆகியோர் காஷ்மீருக்கு சிறப்பு அங்கீகாரத்தை நீக்கியது தவறு என்று வழக்கு தொடுத்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெட்ச்சூரி அங்கு கைது செய்யப்பட்டு இருக்கும் அரசியல் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்துள்ளார்.

உச்ச நீதிமன்றம் காஷ்மீர்
இந்த வழக்கில் இன்று முக்கியமான உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது .அதன்படி இந்த காஷ்மீர் பிரச்சனையில் 370 சட்டப்பிரிவு நீக்கத்திற்கு எதிராக தொடுக்கப்பட்டு இருக்கும் அனைத்து வழக்குகளையும் அரசியல் சாசன அமர்விற்கு மாற்றுவதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

நோட்டீஸ் கட்டுப்பாடுகள்
அதேபோல் காஷ்மீரில் நிலவும் கட்டுப்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கை தொடுத்தவர்களில் ஒருவரான சமூக செயற்பாட்டாளர் ஷேலா ரஷீத் இதுகுறித்து டிவிட் செய்துள்ளார்.
|
நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது
அதில், 370 சட்டப்பிரிவு நீக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் எடுத்து வைத்து இருக்கும் முதல்படி இது. மத்திய அரசுக்கு இதில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் இந்த வழக்கு தற்போது அரசியல் சாசன அமர்விற்கும் அனுப்பப்பட்டுள்ளது.அக்டோபர் முதல் வாரம் இந்த வழக்கு விசாரிக்கப்பட உள்ளது.

ஷேலா ரஷீத் அடக்குமுறை
நாங்கள் இதற்கு எதிராக எங்களது போராட்டத்தை தொடர்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.காஷ்மீரை சேர்ந்த ஷேலா ரஷீத், இந்தியாவில் மதிக்கப்படும் மாணவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜேஎன்யூ கல்லூரியில் அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்து இவர் இந்தியா முழுக்க பிரபலம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு தற்போது ஆதரவு பெருகி வருவது குறிப்பிடத்தக்கது.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ஐஎஸ்ஐ தீவிரவாதிகளின் புது சதி.. இந்திய அரசியலுக்குள் ஊடுருவ திட்டம்.. அதிர வைக்கும் பயங்கர பிளான்!












Click it and Unblock the Notifications