Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீதிபதி மீது அவதூறு.. “சாரி” கேட்ட காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர்! நேரில் வாங்க - டெல்லி ஹைகோர்ட் குட்டு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சமூக செயற்பாட்டாளர் கவுதம் நவ்லகாவை ஜாமினில் விடுதலை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிபதி முரளிதரை விமர்சித்து கருத்திட்டதற்காக காஷ்மீர் பைல்ஸ் இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி டெல்லி உயர்நீதிமன்றத்திடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

பீமா கோரேகான் வழக்கில் யுஏபிஏ சட்டத்தின் கீழ் கடந்த 2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார் 70 வயதான சமூக செயற்பாட்டாளர் கவுதம் நவ்லகா. இவரோடு சேர்த்து மொத்தம் 16 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்கள்.

2 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த நவ்லகாவுக்கு சிறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணாமாக தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என அவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

உச்சநீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்றம் உத்தரவு

இதனை தொடர்ந்து அவரை வீட்டு சிறையில் ஒரு மாதம் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து தலோஜா சிறையில் இருந்து வீட்டு காவலில் வைப்பதற்காக பெலாபூருக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். தற்போது கவுதம் நவ்லகா வீட்டுக்காவலில் இருந்து வருகிறார்.

காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர் ட்வீட்

காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர் ட்வீட்

இந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு நீதிபதி எஸ் முரளிதர், கவுதம் நவ்லகாவை சிறையில் அடைக்க வேண்டும் என பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து, வீட்டுக் காவலில் வைக்கலாம் என உத்தரவிட்டதை விமர்சித்து காஷ்மீர் பைல்ஸ் இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். அதில் நீதிபதி பாரபட்சம் காட்டியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு அவர் விமர்சித்து இருந்தார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

இந்த நிலையில் அவர் மீதும் அவரை போன்றே கருத்து தெரிவித்த ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் எஸ் குருமூர்த்தி மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமாக எடுத்து விசாரித்தது டெல்லி உயர்நீதிமன்றம். முரளிதர் கடந்த 2018 ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி வகித்தவர். தற்போது அவர் ஒடிசா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கிறார்.

 மன்னிப்பு கேட்ட அக்னிஹோத்ரி

மன்னிப்பு கேட்ட அக்னிஹோத்ரி

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சித்தார் மிர்துல் மற்றும் தல்வந்த் சிங் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இன்று விவேக் அக்னிஹோத்ரி நேரில் ஆஜரா ஆஜராகாமல் பதில் மனுவை மட்டும் அவரது வழக்கறிஞர் மூலமாக தாக்கல் செய்தார். அதில் நீதிபதி முரளிதர் மீதான விமர்சனத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக தெரிவித்து இருந்தார்.

ட்விட்டர் பதிவு நீக்கம்

ட்விட்டர் பதிவு நீக்கம்

வழக்கில் ஆஜரான அக்னிஹோத்ரியின் வழக்கறிஞர், இயக்குநர் தனது பதிவை ட்விட்டரிலிருந்து நீக்கிவிட்டதாக விளக்கினார். இதனை கேட்ட நீதிமன்ற உதவியாளர், நீதிபதி முரளிதருக்கு எதிரான பதிவு ட்விட்டர் நிறுவனத்தால் நீக்கப்பட்டது என்றும், அதை இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தாமாக நீக்கவில்லை எனவும் கூறினார்.

நேரில் மன்னிப்பு கேட்கனும்

நேரில் மன்னிப்பு கேட்கனும்

இதனை தொடர்ந்து வழக்கை 2023 மார்ச் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி உயர்நீதிமன்றம், அப்போது இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. "தனது மன்னிப்பை அவர் நேரில் தெரிவிக்க வேண்டும். எப்போது பதில் மனுவின் மூலமாகவே மன்னிப்பு கேட்டுவிட முடியாது." என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+