"காஷ்மீர் எங்களுக்குத்தான்".. அல் கொய்தாவின் இந்திய துணைக்கண்ட பிரிவு 2வது வீடியோ.. பரபரப்பு!
டெல்லி: காஷ்மீர் எங்களுக்குத்தான், அங்கிருந்து இந்திய ராணுவத்தை வெளியேற்றுவோம் என்று அல் கொய்தா அமைப்பின் இந்திய துணைக்கண்ட பிரிவு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அமைப்பு இரண்டாவது முறையாக இதுபோன்ற வீடியோவை வெளியிட்டுள்ளது.
Recommended Video
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டதில் இருந்தே அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. ஒரு பக்கம் லடாக்கில் ஆக்கிரமிப்பு செய்ய சீனா தீவிரமாக முயன்று வருகிறது. இன்னொரு பக்கம் காஷ்மீரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்ய முயன்று வருகிறது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான் பெற்ற வெற்றி ஜம்மு காஷ்மீரில் இந்தியாவிற்கு எதிராக திரும்புமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனென்றால் தாலிபான் அமைப்பின் ஆதரவில் பல இஸ்லாமிய அமைப்புகள், தீவிரவாத இயக்கங்கள் உள்ளன. அல் கொய்தா இப்போதும் கூட தாலிபான் அமைப்புடன் நட்பாகவே இருக்கிறது.

நட்பு
இந்த நிலையில் பாகிஸ்தான், தாலிபான் உதவியோடு அல் கொய்தா போன்ற அமைப்புகள் ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்துமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. இதனால்தான் தாலிபான் அரசை இதுவரை இந்தியா அங்கீகரிக்காமல் உள்ளது. ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடமாக திகழ கூடாது. ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளின் கூடாரமானால் அது அண்டை நாடுகளின் பாதுகாப்பில் சிக்கலை ஏற்படுத்தும் என்று இந்தியா தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது.

இந்தியாவை வெளியேற்றுவோம்
காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமான நாடு கிடையாது. இந்திய ராணுவம் காஷ்மீரில் அத்துமீறி நுழைந்துள்ளது. காஷ்மீரில் அத்துமீறி இந்தியா ஆக்கிரமிப்பை செய்துள்ளது. காஷ்மீர் எங்களுக்குத்தான் சொந்தம். பாபர் மசூதியை இடித்து இஸ்லாமியர்களை இந்தியா கொடுமைப்படுத்தி உள்ளது. காஷ்மீரில் இஸ்லாமியர்கள் தினமும் கொடுமைகளை அனுபவிக்கிறார்கள்.

பெண்கள்
காஷ்மீரில் பெண்கள், குழந்தைகள் கொடுமைக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அவர்களை நாங்கள் விடுதலை செய்வோம். இந்திய ராணுவம் இந்த கொடுமைகளை நிகழ்த்துகிறது. இதனால்தான் நாங்கள் ஆயுதங்களை தூக்கி இருக்கிறோம். அசாமில் நாங்கள் மேற்கொண்ட பதிலடி போல விரைவில் தொடர் பதிலடியை மேற்கொள்வோம் என்று அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியா குற்றச்சாட்டு
இந்த நிலையில்தான் அல் கொய்தா அமைப்பின் இந்திய துணைக்கண்ட பிரிவுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. உளவு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவலின்படி அல் கொய்தா அமைப்பின் இந்திய துணைக்கண்ட பிரிவுக்கு பின் பாகிஸ்தான்தான் இருக்கிறது. பாகிஸ்தான் அரசின் தூண்டுதலின் பெயரில் இந்த வீடியோவை இரண்டாவது முறையாக அல் கொய்தா அமைப்பின் இந்திய துணைக்கண்ட பிரிவு வெளியிட்டுள்ளது.

தீவிரவாதிகள்
அல் கொய்தா அமைப்பின் இந்திய துணைக்கண்ட பிரிவு தீவிரவாதிகள்தான் இந்த வீடியோவில் உள்ளனர். இந்த அமைப்பை உருவாக்கியது பாகிஸ்தான்தான். பாகிஸ்தானின் தூண்டுதலின் பெயரில் அவர்கள் எழுதிக்கொடுத்ததைதான் அல் கொய்தா அமைப்பின் இந்திய துணைக்கண்ட பிரிவு பேசுகிறது. தீவிரவாத அமைப்பிற்கு எதிரான சர்வதேச அமைப்பு கண்டனம் தெரிவித்த நிலையில்தான் இப்போது பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக தீவிரவாத அமைப்புகளை தூண்டிவிடுகிறது என்று இந்தியாவின் உளவுத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications