காஷ்மீர் கலவரத்திற்கு பாகிஸ்தான்தான் காரணம்.. ராகுல் காந்தி திடீர் டிவிட்.. என்ன நடக்கிறது?

ஜம்மு காஷ்மீர் பிரச்சனை என்பது உள்நாட்டு விவகாரம், அங்கு நடக்கும் வன்முறைக்கு பாகிஸ்தான்தான் காரணம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Rahul Gandhi about Kashmir issue

    டெல்லி: ஜம்மு காஷ்மீர் பிரச்சனை என்பது உள்நாட்டு விவகாரம், அங்கு நடக்கும் வன்முறைக்கு பாகிஸ்தான்தான் காரணம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

    ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை நீக்குவதாக மத்திய அரசு சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தது. அதேபோல் காஷ்மீரில் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, பருக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோர் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    Kashmir issue is the internal matter of India & Pakistan is the reason for riot there says, Rahul Gandhi

    இதற்கு எதிராக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த சில நாட்களாக குரல் கொடுத்து வந்தார். கடந்த வாரம் அவர் காஷ்மீர் மக்களை சந்திக்க முயன்று முடியாமல் திரும்பி வந்த சம்பவமும் நடந்தது. இந்த நிலையில் காஷ்மீர் பிரச்சனை குறித்து தற்போது ராகுல் காந்தி டிவிட் செய்துள்ளார்.

    அதில், நான் இப்போது இருக்கும் அரசுடன் பல்வேறு விஷயங்களில் முரண்பட்டு இருக்கிறேன் . ஆனால் ஒரு விஷயத்தை நான் இப்போது தெளிவாக சொல்லிவிடுகிறேன். காஷ்மீர் பிரச்சனை என்பது உள்நாட்டு பிரச்சனை. இந்த பிரச்சனையில் பாகிஸ்தான் தலையிடுவதற்கோ வேறு வெளிநாடுகள் தலையிடுவதற்கோ கொஞ்சமும் இடமில்லை.

    ஜம்மு காஷ்மீரில் வன்முறை நடக்கிறது. இந்த வன்முறை பாகிஸ்தான் மூலம் தூண்டப்பட்டு அவர்கள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. உலகிலேயே தீவிரவாதத்தை ஆதரிக்கும் மிக முக்கியமான பெரிய நாடு பாகிஸ்தான்தான் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட் செய்துள்ளார்.

    இவ்வளவு நாள் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காஷ்மீர் பிரச்சனையில் வேறு மாதிரியான நிலைப்பாட்டை எடுத்து இருந்தார். காஷ்மீரில் அமைதி திரும்பாமல் இருக்க பாஜக அரசுதான் காரணம் என்று கூறி வந்தார். இந்த நிலையில் தற்போது புதிய திருப்பமாக காஷ்மீரில் கலவரம் ஏற்பட பாகிஸ்தான்தான் காரணம் என்று கூறியுள்ளார்.

    ராகுல் காந்தியின் இந்த திடீர் நிலைப்பாடு பாஜகவினரை குஷிப்படுத்தி உள்ளது. அரசுக்கு சாதகமாக அவர் பேசியது பாஜகவினரை சந்தோசத்திற்கு உள்ளாக்கி உள்ளது. அதே சமயம் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியின் இந்த டிவிட்டால் குழப்பத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+