டெல்லி தேர்தல்: கெஜ்ரிவால் 'அப்பவே அதை' செய்திருக்கனும்..ஆம் ஆத்மி தோல்வி குறித்து பிரசாந்த் கிஷோர்
டெல்லி: டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்ததற்கு மிக முக்கியமான காரணம் அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வது தொடர்பாக எடுத்த காலதாமதமான முடிவுதான் என்கிறார் ஜன சுராஜ் கட்சித் தலைவரும் தேர்தல் வியூக வல்லுநருமான பிரசாந்த் கிஷோர்.
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 10 ஆண்டுகால ஆட்சியை பாஜகவிடம் பறிகொடுத்தது. பாஜக 27ஆண்டுகளுக்குப் பின்னர் தலைநகர் டெல்லியில் ஆட்சியை அமைக்கிறது.

டெல்லி தேர்தல் களத்தில் ஆம் ஆத்மியும் காங்கிரஸும் 'இந்தியா கூட்டணியாக' இணைந்து களம் கண்டிருந்தால் பாஜகவால் வெல்ல முடியாமல் போயிருக்கும் என்பது பொதுவான கருத்து. 16 தொகுதிகளில் பாஜக தோல்வியைத் தழுவி இருக்கும்; ஆம் ஆத்மி- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது எனவும் தேர்தல் புள்ளி விவரங்களை முன்வைத்து விவாதிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் டெல்லி தேர்தல் முடிவுகள் தொடர்பாக தேர்தல் வியூக வல்லுநரான ஜன சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் கூறியிருப்பதாவது: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட உடனேயே அவர் தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்; ஜாமீனில் வெளி வந்து பின்னர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது எந்த ஒரு தாக்கத்தையும் மக்களிடையே ஏற்படுத்தவில்லை.
அதேபோல பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சிக்கு அதீதமாக முன்னுரிமை கொடுத்துவிட்டார் கெஜ்ரிவால். டெல்லியை கவனித்த பிறகு ஓய்வான நேரங்களில் பிற மாநிலங்களில் கெஜ்ரிவால் கவனம் செலுத்தி இருக்கலாம்.
அதேபோல 'இந்தியா கூட்டணி'யில் ஆம் ஆத்மி இருக்கிறதா? இல்லையா? என்கிற ஒரு குழப்பத்தையும் அக்கட்சி உருவாக்கி வைத்திருந்தது. இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சியும் இடம் பெற்று சில போராட்டங்கள நடத்தியது; அதே நேரத்தில் டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மியும் காங்கிரஸ் கட்சியும் எதிரும் புதிருமாக மோதிக் கொண்டன. இதனால் ஆம் ஆத்மியின் இந்தியா கூட்டணி குறித்த நிலைப்பாடு குழப்பமான நிலையை வாக்காளர்களிடத்தில் உருவாக்கி வைத்திருந்தது. இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications