பகீர் கிளப்பும் கேரளா குண்டுவெடிப்பு.. இதற்கு முன்பு இந்தியாவை உறைய வைத்து பயங்கரவாத தாக்குதல் எது
டெல்லி: கேரளாவில் நடந்த குண்டுவெடிப்பு பயங்கரவாத செயலாக இருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில், இதற்கு முன்பு இங்கு நடந்த மோசமான தாக்குதல் எது என்பது குறித்துப் பார்க்கலாம்.
இன்று காலை கேரளாவில் உள்ள பிரார்த்தனை கூட்டத்தில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. காலை 9.30 மணியளவில் முதல் குண்டு வெடித்த நிலையில், அதன் பிறகு அடுத்தடுத்து குண்டுகள் வெடித்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், இது ஐஇடி குண்டுவெடிப்பால் ஏற்பட்டதை போலீசார் உறுதி செய்துள்ளனர்.
குண்டுவெடிப்பு: இந்த கேரள குண்டு வெடிப்பிற்குப் பின்னணியில் பயங்கரவாதிகள் இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இதற்கிடையே இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு முன்பு நமது நாட்டில் நடந்த மோசமான பயங்கரவாத தாக்குதல் குறித்துப் பார்க்கலாம்.
கடந்த 2019 ஜூன் மாதம் காஷ்மீரின் அவந்திபோராவில் நடந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். அதே ஆண்டு மார்ச் மாதம் காஷ்மீரில் சின்ன சின்ன பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. உதாரணமாக அதே ஆண்டு மார்ச் மாதம் ஜம்முவில் பேருந்து நிலையம் ஒன்றில் நடத்தப்பட்ட குண்டுவீச்சு தாக்குதலில் மூன்று பேரும், ஏப்ரல் மாதம் நடந்த தாக்குதலில் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த இருவரும் உயிரிழந்தனர்.
புல்வமா தாக்குதல்: இருப்பினும், இதற்கு முன்பு நடந்த மிக மோசமான தாக்குதல் என்றால் அது கடந்த 2019இல் நடந்த புல்வாமா தாக்குதல்தான். கடந்த 2019 பிப்ரவரி 14ஆம் தேதி நடந்த இந்த கொடூர தாக்குதலை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறக்க முடியாது.. அங்கு நமது பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
சிஆர்பிஎஃப் வீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி ஒருவர் வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனத்தை எடுத்து வந்து மோதியுள்ளார். இந்த பேருந்து சிஆர்பிஎஃப் கான்வாய்யின் ஒரு பகுதியாக இருந்தது. பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள சிஆர்பிஎஃப்-ன் லெத்போரா முகாமில், உயிரிழந்த வீரர்களின் நினைவாக அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நினைவுச்சின்னம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
உரி அட்டாக்: அதற்கு முன்பு நடந்த தாக்குதல் என்றால் அது 2016 செப் 18ஆம் தேதி நடந்த தாக்குதல் தான். பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி ஒருவன் காஷ்மீரில் உள்ள உரியில் அமைந்துள்ள ராணுவத் தளத்தைத் தாக்கினர். அதில் 17 வீரர்கள் கொல்லப்பட்டனர். எல்லைக் கட்டுப்பாட்டிற்கு மிக அருகில் அமைந்துள்ள இந்த ராணுவ தளத்தை மொத்தம் நான்கு பயங்கரவாதிகள் தாக்கியுள்ளனர். டோக்ரா படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்களை அதிகம் உயிரிழந்துள்ளனர்.
சுமார் 3 மணி நேரம் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு 4 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த 20 ஆண்டுகளில் காஷ்மீரில் உள்ள ராணுவ தளத்தில் நடந்த மிக மோசமான தாக்குதல் இதுவாகும். இந்தத் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நுழைந்த இந்தியா, பயங்கரவாத தளங்களைக் குறிவைத்து சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது.
மும்பை தாக்குதல்: அதற்கு முன்பு நடந்த மோசமான தாக்குதல் என்றால் அது மும்பை தாக்குதல் தான். இது இந்திய வரலாற்றில் நடந்த மிகக் கொடூரமான தாக்குதல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கடந்த 2008 நவம்பர் 26ஆம் தேதி பாகிஸ்தான் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகள் மும்பையில் பல்வேறு இடங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தினர். சில நாட்கள் வரை நீட்டித்த இந்தத் தாக்குதலில் சுமார் 166 பேர் உயிரிழந்தனர். மேலும், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications