'கேரளா' சேட்டை.. முல்லைப் பெரியாறு அணை குறித்து லோக்சபாவில் விவாதிக்க கோரி காங்கிரஸ் எம்பி நோட்டீஸ்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக லோக்சபாவில் விவாதிக்க வலியுறுத்தி கேரளா மாநில காங்கிரஸ் எம்பி ஹிபி ஈடன் ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார். தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கேரளா எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணை பலமாகவே இருக்கிறது என உச்சநீதிமன்றமும் வல்லுநர்கள் குழுவும் திட்டவட்டமாக தெரிவிததுவிட்ட நிலையிலும் கேரளா மீண்டும் மீண்டும் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

கேரளவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. தமிழ்நாட்டுக்குச் சொந்தமானது இந்த அணை. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பொறியாயளர் பென்னி குக் சொந்த முயற்சியால் தமிழர்களின் பெரும் உயிர்த் தியாகத்தால் தமிழ்நாட்டு எல்லையில் கட்டப்பட்டதுதான் முல்லைப் பெரியாறு அணை. தமிழ்நாட்டின் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்காக பென்னி குக் இந்த முல்லைப் பெரியாறு அணையை கட்டினார்.

mullaperiyar dam kerala

முல்லைப் பெரியாறு அணையை பல ஆண்டுகளாக கேரளா எதிர்த்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணை பலவீனமாகிவிட்டதாக இடித்துவிட்டு பிரம்மாண்ட புதிய அணை கட்டும் சதி நோக்கத்துடன் கேரளா செயல்பட்டு வருகிறது. இதனால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியில் இருந்து 136 அடியாகவும் குறைத்துவிட்டது கேரளா. இதனை இப்போதும் ஏற்க மறுத்து வருகிறது கேரளா.

mullaperiyar dam kerala

லோக்சபாவில் கடந்த வாரம் முல்லைப் பெரியாறு ஆற்றில் புதிய அணை கட்டுவது தொடர்பாக கேரளா எம்பி டீன் குரியகோஸ் கேள்வி எழுப்பினார் அதற்கு பதிலளித்த மத்திய இணை அமைச்சர் ராஜ்பூஷன் சவுத்ரி, முல்லைப் பெரியாறு அணை தொடர்ந்து ஆய்வுக்குட்படுத்தப்பட்டுதான் வருகிறது. முல்லைப் பெரியாறு ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் திட்டம் எதுவுமே இல்லை என்றார்.

இந்த நிலையில் இன்று லோக்சபாவில் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக விவாதிக்க கோரி கேரளாவின் காங்கிரஸ் எம்பி ஹிபி ஈடன் ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ் கொடுத்திருக்கிறார். கேரளாவுடன் நல்லுறவையே தமிழ்நாடு அரசும் தமிழ்நாட்டு மக்களும் பேணி வருகின்றனர். கேரளாவின் வயநாடு நிலச்சரிவு துயரத்திலும் கூட தமிழ்நாடுதான் முதல் ஆதரவுக் கரத்தை நீட்டி மீட்புக் குழுக்களையும் அனுப்பியது. ஆனாலும் கேரளா அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டுக்கு எதிராகவே தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+