Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kerala nuns: “கட்டாயப்படுத்தி வாக்குமூலம் வாங்கினார்கள்” கன்னியாஸ்திரிகள் கைது விஷயத்தில்.. வெளியான ஷாக் தகவல்

Subscribe to Oneindia Tamil

ராய்பூர்: கேரளாவை சேர்ந்த மூன்று கன்னியாஸ்திரிகள் சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்டனர். மதமாற்றம் செய்ய முயன்ற குற்றச்சாட்டின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களால் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் பெண்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருந்ததாக காவல்துறை கூறியிருந்த நிலையில், என்னிடம் கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெறப்பட்டதாக அப்பெண் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார்.

இது மத சுதந்திரம் மற்றும் சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும், அரசியல் ரீதியாகவும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

Kerala Chhattisgarh police

என்ன நடந்தது?

கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரிகளான ப்ரீத்தி மேரி மற்றும் வந்தனா பிரான்சிஸ், மற்றும் சுஷ்மான் மண்டவி ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை சத்தீஸ்கரின் துர்க் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். மத சுதந்திர சட்டம் மற்றும் பாலியல் வர்த்தக தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதாவது இவர்கள் நாராயண்பூர் பகுதியிலிருந்து மூன்று பெண்களை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்து, அவர்களை கடத்த முயன்றதாக பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்தவர்கள் புகார் அளித்துள்ளனர்.

கேள்விக்கு உள்ளான புகார்

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதே சமயம் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் 3 பெண்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதில் ஒரு பெண், தன்னை மதமாற்றம் செய்ய முயன்றதாக விசாரணையில் தெரிவித்திருக்கிறார் என காவல்துறை வட்டாரங்கள் கூறியிருந்தன.

ஆனால், வலதுசாரி அமைப்பை சேர்ந்த ஜோதி ஷர்மா என்பவர் தன்னை அச்சுறுத்தி, தாக்கி, தனது வாக்குமூலத்தை மாற்றி கொடுக்க சொன்னார் என்று அப்பெண் தற்போது தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார். இந்த பேட்டியின் மூலம் கேரள கன்னியாஸ்திரிகள் மீதான புகார் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது.

பஜ்ரங் தள் என்ன சொல்கிறது?

இது தொடர்பாக பஜ்ரங் தள் சத்தீஸ்கர் ஒருங்கிணைப்பாளர் ரிஷி மிஸ்ரா கூறுகையில், "ஒரு ஆட்டோ ஓட்டுநர், கன்னியாஸ்திரிகளும் பெண்களும் பேசிக்கொண்டிருந்ததை ஒட்டுக்கேட்டு, அவர்கள் கடத்தப்படுவதாக சந்தேகப்பட்டார். அதன் பிறகு எங்கள் ஊழியர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று ரயில்வே காவல்துறைக்கு புகார் அளித்தனர்" என்று தெரிவித்தார். ஜோதி ஷர்மா பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர் அல்ல என்றும், துர்க் வஹினி மாத்ருசக்தியைச் சேர்ந்தவர் என்றும் அவர் கூறினார்.

இந்துத்துவா

ஜோதி ஷர்மா தன்னை ஒரு 'இந்துத்துவவாதி' என்று விவரித்துள்ளார். "எங்கே இந்துத்துவம் பாதுகாக்கப்பட வேண்டுமோ, அங்கே நான் வருவேன்" என்று அவர் குறிப்பிட்டார். சத்தீஸ்கர் காவல்துறை டிஜிபி அருண் குமார் கௌதம், நாராயண்பூர் பெண்ணின் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து, "விஷயம் நீதிமன்ற விசாரணையில் உள்ளது" என்று கூறியுள்ளார்.

கேரள கன்னியாஸ்திரிகள் சத்தீஸ்கரில் இருந்து 21 வயதான பழங்குடி சமூகத்தை சேர்ந்த பெண்ணை மதம் மாற்றி கடத்தி செல்வதாக இந்துத்துவா அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். இவர்கள் குறிப்பிடும் அப்பெண், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "தயவுசெய்து கைது செய்யப்பட்ட மூன்று கன்னியாஸ்திரிகளையும் விடுவியுங்கள். அவர்கள் அப்பாவி" என்று கூறியுள்ளார்.

மாற்றப்பட்ட FIR

மேலும், தன்னார்வத்தின் பேரிலும், பெற்றோரின் சம்மதத்துடனும் கன்னியாஸ்திரிகளுடன் பயணிக்க வெள்ளிக்கிழமை துர்க் ரயில் நிலையத்திற்குச் சென்றதாக அவர் தெரிவித்தார். ஷர்மா தன்னைத் தாக்கியதாகவும், துர்க்கில் உள்ள அரசு ரயில்வே காவல்துறை (GRP) தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்யவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். மாறாக, பஜ்ரங் தள் உறுப்பினர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

வேலைவாய்ப்பு

தன்னுடைய பெற்றோருடனும் நான்கு சகோதரிகளுடனும் வசிக்கும் அந்தப் பெண், தினக்கூலியாக ஒரு நாளைக்கு ₹250 சம்பாதிக்கிறார். அதே தேவாலயத்திற்குச் செல்லும், தனக்கு சகோதரனைப் போன்ற மண்டவி என்ற கன்னியாஸ்திரிகள் ஒருவரால் வேலை வாய்ப்பு பற்றி அறிந்ததாக அவர் கூறினார். கன்னியாஸ்திரிகளுக்கு சமையல்காரராகவும், மருத்துவமனையில் நோயாளிகளைப் பார்த்துக் கொள்ளவும் ₹10,000 சம்பளம், உணவு, உடை மற்றும் இருப்பிடம் வழங்கப்படும் என உறுதியளித்ததாகவும், அதைக் கேட்டு தான் மகிழ்ச்சி அடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

விசாரணை

கைது செய்யப்பட்ட நாளில், நாராயண்பூர் ஓர்ச்சாவைச் சேர்ந்த மேலும் இரண்டு பெண்களுடன் காலை 6 மணியளவில் துர்க் ரயில் நிலையத்திற்கு சென்றதாக அந்தப் பெண் கூறினார். அவர்களுடன் மண்டவியும் இருந்தார். காலை 9 மணியளவில், இதற்கு முன் சந்திக்காத கன்னியாஸ்திரிகள் வந்தனர். சிறிது நேரத்திலேயே, ஒரு பஜ்ரங் தள் ஊழியரும், ரயில்வே காவல்துறையும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தத் தொடங்கினர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

பெண்ணின் வாக்குமூலம்

"அவர்கள் எங்களை ரயில்வே காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். எங்களை மிகவும் திட்டினர், ஜோதி ஷர்மா என் முகத்தில் இரண்டு முறை அறைந்தார். நீங்கள் நாங்கள் சொல்வதைக் கேட்காவிட்டால், உனது சகோதரிகளை சிறையில் அடைத்து துன்புறுத்துவோம் என்று அவர் கூறினார். நாங்கள் இங்கு கட்டாயமாகக் கொண்டு வரப்பட்டோம் என்று நாங்கள் சொல்ல வேண்டும் என அவர்கள் விரும்பினர். நான் ஷர்மாவிடம், என் விருப்பப்படி பெற்றோரின் சம்மதத்துடன் இங்கு வந்துள்ளேன் என்று கூறினேன். நான் காவல் நிலையத்தில் இருக்கும்போது இரண்டு அல்லது மூன்று காவலர்கள் முன்னிலையில் இதைச் சொன்னேன்," என்று அவர் கூறினார்.

இது குறித்து ஷர்மா தரப்பில், "நான் யாரையும் தொடவில்லை. நான் வந்தபோது அவர்கள் ஏற்கெனவே காவல் நிலையத்தில் இருந்தனர். காவல்துறை என்னை அவர்களைத் தொட அனுமதிக்குமா? நான் இந்த குற்றச்சாட்டை முதன்முறையாகக் கேட்கிறேன். இதற்கு முன்னர், அவர்கள் நான் ஒரு கன்னியாஸ்திரியை அடித்ததாகக் கூறினார்கள், அது பொய்," என்று தெரிவித்தார்.

பழங்குடி சமூகத்தை சேர்ந்த பெண் மேலும் கூறுகையில், "நான் அந்த கன்னியாஸ்திரிகளை முதன்முறையாக சந்தித்தேன். அவர்கள் எங்களைத் தாக்கும்போது, ஒரு கன்னியாஸ்திரி, 'கவலைப்படாதீர்கள், நான் உங்களுடன் இருக்கிறேன்' என்று சொன்னார். என்னை அடிப்பவரைப் பார்த்து, 'எங்களை அடியுங்கள், அவர்களை அடிக்க வேண்டாம்' என்று அவர் கூறினார்," என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+