கேரளா: பாலக்காடு தொகுதி இடைத்தேர்தல்.. திக் திக் பீதியில் ஆளும் இடதுசாரி முன்னணி-மீண்டும் 3-ம் இடம்?
டெல்லி: கேரளா மாநிலம் பாலக்காடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் என்னவாகுமோ என்கிற பெரும் பீதியில் ஆளும் இடதுசாரி முன்னணி உள்ளது. பாலக்காடு சட்டசபை தொகுதி கருத்து கணிப்புகளோ காங்கிரஸ், பாஜக இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது; ஆளும் இடதுசாரி முன்னணி வேட்பாளருக்கு 3-வது இடம்தான் கிடைக்கும் என தெரிவித்திருப்பதால் இத்தொகுதி தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக உள்ளது.
தமிழ்நாட்டு எல்லையில் உள்ளது கேரளாவின் பாலக்காடு சட்டசபை தொகுதி. 1952-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை காங்கிரஸ், இடதுசாரி முன்னணி ஆகியவை மாறி மாறி வெற்றி பெற்று வந்துள்ளன. 2011, 2016 மற்றும் 2021 சட்டசபை தேர்தல்களில் தொடர்ந்து இத்தொகுதியில் காங்கிரஸ் முன்னணி வெற்றி பெற்றது.

தொகுதி மறுசீரமைப்புகளுக்கு பின்னர் 2011 முதல் 2021 வரையில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் ஷாபி பரம்பில்தான் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றார். 2024 லோக்சபா தேர்தலில்போட்டியிட்டு வென்றதால் பாலக்காடு தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொண்டுள்ளது. லோக்சபா தேர்தலில் வடகரா தொகுதியில் சிபிஎம் மூத்த வேட்பாளர் சைலஜா டீச்சரை தோற்கடித்தவர் ஷாபி பரம்பில்.
2016, 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தல்களில் சிபிஎம் தலைமையிலான இடதுசாரி முன்னணி 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டு பாஜக 2-வது இடத்தைப் பெற்றது. 2016-ம் ஆண்டு தேர்தலில் பாஜக வேட்பாளர் ஷோபா சுரேந்திரன் இத்தொகுதியில் 29.08% வாக்குகளையும் இடதுசாரி வேட்பாளர் கிருஷ்ணதாஸ் 28.07% வாக்குகளையும் பெற்றிருந்தனர். 2019-ம் ஆண்டு தேர்தலிலும் பாஜக 35.34% வாக்குகளுடன் 2-வது இடத்தையும் 25.64% வாக்குகளுடன் இடதுசாரி முன்னணி 3-வது இடத்துக்கும் தள்ளப்பட்டது.
தற்போதைய இடைத்தேர்தலில் காங்கிரஸ் முன்னணியின் வேட்பாளராக கேரள காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் ராகுல் மம்கூடதில் களம் காண்கிறார். காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு ஒருங்கிணைப்பாளராக இருந்த சரின், ராகுல் மம்கூடதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் காங்கிரஸில் இருந்து சரின் வெளியேற்றப்பட்டார். இந்த சரின் தான் தற்போது இடதுசாரி முன்னணியின் வேட்பாளர். பாஜக வேட்பாளராக கிருஷ்ணகுமார் போட்டியிடுகிறார்.
கேரளா மாநிலத்தில் தற்போதைய முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு மீது இடதுசாரி ஆதரவாளர்களே கடும் அதிருப்தியில்தான் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் பாலக்காடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக மனோரமா நாளிதழ் கருத்து கணிப்பு ஒன்றை அண்மையில் நடத்தியிருந்தது. அதில் பாலக்காடு தொகுதியில் காங்கிரஸ்- பாஜக இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது; வழக்கம் போல 3-வது இடத்துக்குதான் ஆளும் இடதுசாரி வேட்பாளர் சரின் தள்ளப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலக்காடு சட்டசபை தொகுதிக்கான வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது. இத்தொகுதியில் மொத்தம் 70.51% வாக்குகள் பதிவாகின. கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் 75.44% வாக்குகள் பதிவாகி இருந்தன. இதனால் கேரளாவில் பிரியங்கா காந்தி போட்டியிடும் வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தல் முடிவை விட பாலக்காடு 'ரிசல்ட்' எப்படி இருக்கும்? என்பது பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக இருக்கிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications