இளம் அமைச்சரான ராம் மோகன் நாயுடுவுக்கு.. விமான போக்குவரத்து துறை ஒதுக்கீடு! யார் இவர்? முழு விவரம்
டெல்லி: மோடி 3.O அமைச்சரவையில் இளம் அமைச்சராக பதவியேற்ற தெலுங்கு தேசம் கட்சியின் ராம் மோகன் நாயுடுவுக்கு விமான போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது.
லோக்சபா தேர்தலில் பாஜக தலமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்த நிலையில், நேற்று நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமரா பதவியேற்றுக்கொண்டார். அவருடன் 72 எம்பிக்கள் கேபினேட் மற்றும் இணையமைச்சர்களாக பதிவியேற்றுள்ளனர். இதில் இளம் அமைச்சராக ராம் மோகன் பதவியேற்றிருந்தார். இந்நிலையில் இவருக்கு விமான போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது.

36 வயதான எம்பி ஒருவர் என்டிஏ கூட்டணியில் அமைச்சராக பதவியேற்பது இதுவே முதல் முறையாகும். டெல்லியில் பள்ளி படிப்பையும் அமெரிக்காவில் எம்பிஏவும் முடித்துள்ள ராம் மோகன் நாயுடு, நாடாளுமன்றத்தில் சிறந்து பணியாற்றியதாக 2020 ஆம் ஆண்டு சன்சட் ரத்னா விருது பெற்றார். நடாளுமன்றத்தில் வேளாண்மை , உணவு பதப்படுத்துதல், ரயில்வே, உள்துறை ஆகிய துறைகளின் நிலைக்குழு உறுப்பினராகவும் இருந்தார்.
இவரது தந்தை யர்ரான் நாயுடு, 1996 மற்றும் 1998க்கு இடையில் ஐக்கிய முன்னணி கூட்டணி அரசில் மத்திய அமைச்சராக பதவி வகித்துள்ளார். இப்படியான அரசியல் குடும்ப பின்னணியிலிருந்து ராம் மோகன் வந்திருந்தாலும், தொடக்கத்தில் இவருக்கு அரசியலில் ஈடுபாடு இருக்கவில்லை. தொழிலதிபராக இருந்த இவரை அரசியலுக்குள் இழுத்தது இவரது தந்தையின் மரணம்தான். 2012ம் ஆண்டு யர்ரான் நாயுடு சாலை விபத்தில் உயிரிழந்தார்.
அதன் பின்னர் இந்தியா வந்த ராம் மோகன் தெலுங்கு தேசம் கட்சியுடன் தனது நெருக்கத்தை வளர்த்துக்கொண்டார். இந்த நெருக்கம் தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக இவரை வளர்த்தது. அதன் பின்னர் 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் அபாரமாக வெற்றி பெற்று தனது 26 வயதில் எம்பியாக தேர்வாகினார்.
இதனையடுத்து இந்த தேர்தலில் ஸ்ரீககுளம் தொகுதியில் நின்று 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த முறை இவருக்கு விமான போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக இந்த துறை ஜோதிர் ஆதித்ய சிந்தியா இந்த துறையின் அமைச்சராக பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications