Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லக்கிம்பூர் விவசாயிகள் மரணம்.. மத்திய இணையமைச்சர் மகன் மீது கொலை வழக்கு.. இன்றே போலீசில் சரண்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லக்கிம்பூரில் விவசாயிகள் உட்பட 9 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் போலீசில் சரண் அடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தின் போது 9 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு விவசாயிகளுக்கும் பாஜகவினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் இந்த கொடூரம் அரங்கேறி உள்ளது. மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸின் ஜீப் விவசாயிகள் மீது ஏறியதில் ஒருவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கான வீடியோவும் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளது. அதோடு இங்கே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் புகார் வைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக இதுவரை போராட்டத்தில் 4 விவசாயிகள், 1 செய்தியாளர், பொதுமக்கள் உட்பட 9 பேர் பலியானதாக சம்யுக்தா கிசான் மோச்சா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

 பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தி

இந்த நிலையில் லக்கிம்பூரில் விவசாயிகளை சந்திக்க சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி ஏற்கனவே கைது செய்யப்பட்டுவிட்டார். இரண்டு நாட்களாக அவர் விடுதி ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளார். முதல் 36 மணி நேரம் வழக்கு எதுவும் பதியாமல் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று பிரியங்கா அதிகாரபூர்வமாக போலீசார் மூலம் கைது செய்யப்பட்டு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

எப்ஐஆர்

எப்ஐஆர்

இதையடுத்து இன்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி லக்கிம்பூர் செல்கிறார். இதற்காக அவர் டெல்லியில் விமானம் ஏறி உள்ளார். அவருடன் சட்டீஸ்கர் முதல்வர் புபேஷ் பாகல், பஞ்சாப் புதிய முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி ஆகியோர் லக்கிம்பூர் செல்கிறார்கள். நேற்று புபேஷ் பாகல் லக்னோவில் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் அவர் விமான நிலைத்திலேயே தர்ணா செய்தார். இந்த நிலையில் இன்று மீண்டும் அவர் லக்கிம்பூர் செல்கிறார்.

கைது

கைது

ஒரு பக்கம் இந்த பிரச்சனைகள் நடந்து வரும் நிலையில் விவசாயிகள் உட்பட 9 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் போலீசில் சரண் அடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா தற்போது டெல்லியில் இருக்கிறார். இவர் நேற்று அளித்த பேட்டியில், விவசாயிகள் மீது மோதியது தன்னுடைய மகனின் கார் என்று ஒப்புக்கொண்டார்.

Recommended Video

    40 மணி நேரத்தில் நடந்த மாற்றம்.. Uttar Pradesh-ஐ புரட்டி போட்ட Priyanka Gandhi
     வழக்கு

    வழக்கு

    ஆனால் அந்த காரில் தன்னுடைய மகன் இல்லை என்று அஜய் மிஸ்ரா குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்த பகுதியில் இருந்த விவசாயிகளோ.. காரில் ஆஷிஸ் இருந்ததை பார்த்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். சில பாஜக நிர்வாகிகளும் காரில் ஆஷிஸ் இருந்ததை உறுதி செய்துள்ளனர். இந்த நிலையில்தான் ஆஷிஸ் போலீசில் சரண் அடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இவர் மீது ஏற்கனவே 302 பிரிவில் கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.

    கொலை வழக்கு

    கொலை வழக்கு

    விவசாயிகள் சிலர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மரணம் அடைந்த விவசாயிகளுக்கு மறுபிரேத பரிசோதனை செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில் உடலில் குண்டுகள் இல்லை என்று முடிவு வந்தால் இந்த எப்ஐஆரில் கொலை வழக்கு பிரிவு 302 நீக்கப்பட்டு, பிரிவு 304 ஏக்கு கீழ் வழக்கு பதியப்படும் . அதாவது கவனக்குறைவாக மரணம் ஏற்படுத்துதல் பிரிவில் கீழ் வழக்கு பதியப்படும். இந்த பிரிவின் கீழ் ஆஷிஸ் கைது செய்யப்பட்டால் ஆஷிஸுக்கு பெயில் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+