லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை- உ.பி.அரசின் விசாரணை கமிஷன் மீது நம்பிக்கை இல்லை- உச்சநீதிமன்றம் டோஸ்
டெல்லி: லக்கிம்பூரில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக உ.பி. மாநில அரசின் விசாரணை ஆணையம் மீது நம்பிக்கை இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த நீதிபதி ஒருவரின் கண்காணிப்பில் லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை சம்பவத்தை விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டம் டெல்லியை தொடர்ந்து ஹரியானா, உ.பி.யிலும் நடைபெற்றது. உ.பி.யின் லக்கிம்பூர் என்ற இடத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள், அம்மாநில துணை முதல்வர் மவுரியாவுக்கு கறுப்பு கொடி காட்ட முயன்றனர்.
அப்போது விவசாயிகள் கூட்டத்தின் மீது ஜீப் ஏற்றப்பட்டதில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். இதனையடுத்து வன்முறை வெடித்ததில் மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். நாட்டையே இந்த விவசாயிகள் படுகொலை சம்பவம் உலுக்கி எடுத்தது.

உச்சநீதிமன்றம் தலையீடு
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனடிப்படையில் உச்சநீதிமன்றமும் தாமாக முன்வந்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, சூர்ய காந்த், ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது. தொடக்கத்தில் லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை சம்பவத்தில் யார் மீதும் உ.பி. அரசு நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.

மத்திய அமைச்சர் மகன் கைது
இதையடுத்து மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா உள்ளிட்டோரை உ.பி. அரசு கைது செய்தது. அத்துடன் பாஜகவினரை தாக்கியதாகவும் விவசாயிகளையும் உ.பி. அரசு கைது செய்தது. இதையடுத்து நடந்த வழக்கு விசாரணையின் போது, சாட்சிகளிடம் முழுமையாக வாக்குமூலங்கள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என உ.பி. அரசு தெரிவித்தது. இதற்கும் அப்போது உச்சநீதிமன்றம் கடும் கண்டனமும் அதிருப்தியும் தெரிவித்தது.
Recommended Video

உ.பி. கமிஷன் மீது நம்பிக்கை இல்லை
இந்நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி பிரதீப் குமார் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆனையம் அமைக்கப்பட்டு லக்கிம்பூர் படுகொலைகள் குறித்து விசாரிக்கப்படுவதாக உ.பி. அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் ஏற்க மறுத்தது. இந்த விசாரணை கமிஷன் மீது நம்பிக்கை இல்லை. வேறு ஒரு மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டுதான் விசாரணை நடத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.

ஓய்வு பெற்ற நீதிபதிகள்
அத்துடன் பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகளான ராகேஷ்குமார் ஜெயின், ரஞ்சித் சிங் ஆகியோரது பெயர்களையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பரிந்துரைத்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை நவம்பர் 12-க்கு ஒத்திவைக்க வேண்டும் என உ.பி.அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே கேட்டுக் கொண்டார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications