லக்கிம்பூர் வழக்கு: ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் விசாரணை- உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையை ஏற்றது உ.பி.அரசு
டெல்லி: லக்கிம்பூரில் விவசாயிகள் 4 பேர் கார் மீது படுகொலை செய்யப்பட்ட வழக்கை வெளி மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் விசாரணை நடத்தலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் யோசனை உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு ஏற்றுள்ளது.
மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்தப்படுகிறது. இதேபோல் உ.பி. மாநிலம் லக்கிம்பூரிலும் கடந்த மாதம் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
உ.பி. துணை முதல்வர் கேசவ் மவுரியா உள்ளிட்டோர் லக்கிம்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வருகை தந்தனர். அப்போது மத்திய அரசுக்கு எதிர்ப்பு வகையில் 3 விவசாய சட்டங்களை திரும்பப் பெறக் கோரி கறுப்பு கொடி போராட்டத்தை விவசாயிகள் நடத்தினர்.

லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை
அப்போது போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது சொகுசு கார் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 4 விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டனர். இதனையடுத்து வன்முறை வெடித்தது. லக்கிம்பூர் வன்முறை சம்பவங்களில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை இந்த சம்பவம் ஏற்படுத்தியது.

உ.பி.அரசு மீது அதிருப்தி
இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் தொடக்கம் முதலே உ.பி. அரசு மெத்தனமாக செயல்படுவதாக உச்சநீதிமன்றம் விமர்சித்தது. இதையடுத்தே மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா உள்ளிட்டோரை உ.பி. போலீசார் கைது செய்தனர். ஆனாலும் சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பெறுவது உள்ளிட்டவை குறித்தும் உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது.

வெளி மாநில நீதிபதிகள்
இதையடுத்து லக்கிம்பூர் படுகொலை வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதிகளான ரஞ்சித் சிங், ராகேஷ் ஜெயின் ஆகியோரில் ஒருவரை விசாரணை நீதிபதியாக நியமிக்கலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. உ.பி.அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆஜராகி இருந்தார்.

அதிகாரிகளை மாற்ற உத்தரவு
இன்றைய விசாரணையின் போது ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு லக்கிம்பூர் சம்பவங்களை விசாரிக்கலாம் என்கிற உச்சநீதிமன்றத்தின் யோசனையை உ.பி. அரசு ஏற்பதாக ஹரீஷ் சால்வே கூறினார். மேலும் இந்த வழக்கின் விசாரணை அதிகாரிகளாக உயர் அதிகாரிகளை நியமிக்க வேண்டும்; தற்போது இன்ஸ்பெக்டர் நிலையிலான அதிகாரிகள்தான் விசாரித்து வருகின்றனர் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இதனையும் ஏற்றுக் கொண்டு வரும் புதன்கிழமைக்குள் உ.பி. அரசு நடவடிக்கை எடுக்கும் என ஹரீஷ் சால்வே உறுதியளித்தார்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications