அதெப்படி கொல்லப்பட்ட பாஜக தொண்டர் வீட்டுக்கு போகலாம்? யோகேந்திர யாதவை சஸ்பெண்ட் செய்த விவசாயிகள்!
டெல்லி: உ.பி. லக்கிம்பூர் வன்முறையில் கொல்லப்பட்ட பாஜக தொண்டர் சுபம் மிஸ்ராவின் குடும்பத்தினருக்கு ஸ்வராஜ் இயக்கத்தின் தலைவர் யோகேந்திர யாதவ் ஆறுதல் கூற சென்றது டெல்லியில் போராடும் விவசாயிகளிடையே கடும் எதிர்ப்பை உருவாக்கி உள்ளது. இதனையடுத்து மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்ட கூட்டமைப்பில் இருந்து யோகேந்திர யாதவை 1 மாதத்துக்கு சஸ்பெண்ட் செய்வதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
லக்கிம்பூரில் கடந்த 3-ந் தேதி கறுப்புக் கொடி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் ஏற்றப்பட்டதில் 4 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதனையடுத்து நடந்த வன்முறைகளில் மேலும் 4 பேர் கொல்லப்பட்டனர்.
விவசாயிகள் மீது காரை ஏற்றி படுகொலை செய்த சம்பவத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.

லக்கிம்பூரில் யோகேந்திர யாதவ்
இந்நிலையில் லக்கிம்பூரில் படுகொலை செய்யப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை ஸ்வராஜ் இயக்கத் தலைவர் யோகேந்திர யாதவ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிரான டெல்லி போராட்டத்தில் ஸ்வராஜ் இந்தியாவும் பங்கேற்றுள்ளது. விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பில் ஸ்வராஜ் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. விவசாயிகளின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறிய யோகேந்திர யாதவ், லக்கிம்பூர் வன்முறையில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் மற்றும் பாஜக தொண்டர் சுபம் மிஸ்ரா குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

விவசாயிகள் எதிர்ப்பு-சஸ்பெண்ட்
யோகேந்திர யாதவின் இந்த சந்திப்பு விவசாயிகள் சங்கத்தினரிடையே கடும் எதிர்ப்பை உருவாக்கி உள்ளது. தங்களது சக விவசாயிகள் மீது கார் ஏற்றி படுகொலை செய்ததால் கொல்லப்பட்ட பாஜக தொண்டர் குடும்பத்தினரை எப்படி யோகேந்திர யாதவ் சந்தித்து ஆறுதல் கூறலாம் என கொந்தளித்தனர் விவசாயிகள். இதனைத் தொடர்ந்து யோகேந்திர யாதவை ஒரு மாதம், டெல்லி போராட்ட களம் மற்றும் விவசாயிகள் சங்க கூட்டமைப்பில் இருந்து சஸ்பெண்ட் செய்வதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

தண்டனையை ஏற்கிறேன்
இது தொடர்பாக கருத்து தெரிவித்த யோகேந்திர யாதவ், நான் மனிதாபிமான அடிப்படையில்தான் பாஜக தொண்டரின் குடும்பத்தினரை சந்தித்தேன். எதிரிகளாக இருந்தாலும் கூட அவர்களுக்கும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதால் சந்தித்தேன். இது என்னுடைய நிலைப்பாடு. இதனை அனைவரும் ஏற்க வேண்டும் என நான் விரும்பவில்லை. என்னை ஒரு மாதம் இடைநீக்கம் செய்துள்ளார்கள். எனக்கு தரப்பட்ட இந்த தண்டனையை மகிழ்ச்சியுடன் நான் ஏற்றுக் கொள்கிறேன். விவசாயிகளின் போராட்ட குணம் சீர்குலையவோ, ஒற்றுமையை சிதைக்கவோ நான் காரணமாக இருக்கப் போவது இல்லை என்றார்.

மன்னிப்பு கேட்ட யோகேந்திர யாதவ்
லும், விவசாய சங்கங்களின் தலைவர்களையும் யோகேந்திர யாதவ் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, அவர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் பாஜக தொண்டர் வீட்டுக்கு சென்றது தவறுதான். அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார் யோகேந்திர யாதவ்.












Click it and Unblock the Notifications