பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க... ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு
டெல்லி: பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி தேதி ஜூன் 30 வரை நீட்டிக்கப்படுவதாக வருமான வரி துறை அறிவித்துள்ளது.
இந்திய வருமான வரிச் சட்டத்தின்படி பான் கார்டு இல்லாமல் பல்வேறு நிதி சார்ந்த நடவடிக்கைகளையும், பணப் பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ள முடியாது. இதன் காரணமாகப் பொதுமக்கள் பான் கார்டினை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

பான் கார்டுடன் ஆதாரை இணைக்க இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பான்-ஆதார் இணைப்பை மேற்கொள்ளாத பலரும் இன்று முயன்றனர். இதன் காரணமாக அந்த இணையதளம் முடங்கியது. இதனால் பலரும் பான்-ஆதார் இணைப்பை மேற்கொள்ள முடியாமல் சிரமத்தை எதிர்கொண்டனர்.
இந்நிலையில், பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி தேதியை வருமான வரி துறை நீட்டித்துள்ளது. அதன்படி இதற்கான கால அவகாசம் வரும் ஜூன் 30 வரை நீட்டிக்கப்படுவதாக வருமான வரி துறை அறிவித்துள்ளது.
அதற்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இல்லையென்றால் பான் கார்டு செயலற்றதாக ஆகிவிடும் என்றும் வருமான வரி துறை எச்சரித்துள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications