Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மோடி அரசை கவிழ்க்க பெரிய பிளான்".. என்ன அது? இடதுசாரிகளின் திட்டத்தை போட்டுடைத்த FATF ரிப்போர்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை இடதுசாரிகள் கவிழ்க்க முயற்சி மேற்கொள்கின்றன என்று எஃப்ஏடிஎஃப் அறிக்கையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

FATF.. இதன் விரிவாக்கம் என்பது Financial Action Task Force என்பதாகும். தமிழில் கூற வேண்டும் என்றால் நிதி நடவடிக்கை பணிக்குழு அல்லது எஃப்ஏடிஎஃப் என சொல்லலாம். இந்த எஃப்ஏடிஎஃப் என்பது ஜி7 நாடுகள் மூலம் கடந்த 1989ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

fatf financial action task force india

இதில் தற்போது இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ரஷ்யா,கனடா, டென்மார்க், பிரேசில், ஜப்பான், மலேசியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, சவூதி அரேபியா உள்பட மொத்தம் 38 நாடுகள் அங்கம் வகித்தன. தற்போது ரஷ்யா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது 37 நாடுகள் உள்ளன. இந்த அமைப்பானது பிரான்ஸ் தலைநகர் பாரிசை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்த எஃப்ஏடிஎஃப்-பின் பணி என்பது சர்வதேச அளவில் கைமாறும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி வழங்குவதை கண்காணித்து அலர்ட் செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது. அதேபோல் பண மோசடி, தீவிரவாத நிதி உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளையும் இது பரிந்துரைத்து வருகிறது. எஃப்ஏடிஎஃப்-வில் உறுப்பினர்களாக இருக்கும் மொத்த நாடுகளும் அதனுடன் சேர்ந்து செயல்பட்டு வருகின்றன. எஃப்ஏடிஎஃஎப் செயல்பாட்டால் நம் நாடு உள்பட பல நாடுகளில் சட்டவிரோத பணப்பரிமாற்றம், பயங்கரவாதத்துக்கு நிதி செல்வது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

பேஜர் அட்டாக் பின்னணியில் கேரள தொழிலதிபர்? யார் இந்த ரின்சன் ஜோஸ்? ட்விஸ்ட்க்கு மேல் ட்விஸ்ட்


இந்த எஃப்ஏடிஎஃப் என்பது அதில் அங்கம் வகிக்கும் நாடுகள் பற்றி Mutual evaluation report அளித்து வருகிறது. அந்த வகையில் நம் நாட்டுக்கான அறிக்கை என்பது India’s mutual evaluation report என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த எஃப்ஏடிஎஃப் அறிக்கையில் தான் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை கவிழ்க்க இடதுசாரி குழுவை சேர்ந்தவர்கள் முயற்சி மேற்கொண்டு வருவதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த அறிக்கையில் உள்ள தகவல்கள் வருமாறு: இந்தியா பல்வேறு வகையான பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளது. மொத்தம் 6 வகையான அச்சுறுத்தல்கள் உள்ளன.

உதயநிதி துணை முதல்வராவதில் தாமதம் ஏன்? பின்னணியில் 2 பெரிய டிமாண்ட்! ஸ்டாலின் தீவிர பரிசீலனை


குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ஜம்மு காஷ்மீரில் ஐஎஸ்ஐஎல் அல்லது அல்குவைதா பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய குழுக்களை சேர்ந்த பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் என்பது உள்ளது. பயங்கரவாத அமைப்புகளில் சேரும்படி இளைஞர்களை குறிவைத்து மூளைச்சலவை செய்யும் பணி நாட்டில் நடக்கிறது. அதேபோல் வடகிழக்கு மாநிலங்களில் இனக்குழுக்கள் இடையேயான பிரச்சனை அச்சுறுத்தலாக இருக்கிறது. அதேபோல் இடதுசாரி extremist குழுவினர் மத்திய அரசை கவிழ்க்க முயல்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது பொதுமக்களை போராட வைத்து மத்திய அரசுக்கு எதிராக அந்த குழுவினர் செயல்படலாம் என வார்னிங் தரப்பட்டுள்ளது.

இஸ்லாமியருக்கு பாஜக பரிசு.. பக்ரித், மொகரத்துக்கு 2 இலவச சிலிண்டர்.. காஷ்மீரில் அமித்ஷா அறிவிப்பு


மேலும் இந்த அறிக்கையில் பணமோசடிக்கு எதிராக நம் நாடு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பாராட்டப்பட்டுள்ளது. பணமோசடி தடுப்பு, பணமோசடியில் ஈடுபடுவோரின் சொத்துகளை பறிமுதல் செய்தல் மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதி அளிப்பதை தடுத்தல், சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை தடுத்தல் உள்ளிட்ட விவகாரங்களில் நம் நாடு எடுத்த நடவடிக்கைகள் பெரும் பலனை அளிக்கும் வகையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது எஃப்ஏடிஎஃப். இந்த விஷயத்தில் இதில் நாட்டில் உள்ள அமலாக்கத்துறை, என்ஐஏ, சிபிஐ உள்பட பல விசாரணை அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக பாராட்டப்பட்டுள்ளது.

அதேவேளையில் பணமோசடி வழக்குகளில் தண்டனை பெற்று கொடுப்பது தாமதமாக உள்ளது. அதனை விரைவுப்படுத்த வேண்டும் எனவும், இன்னும் கூட சில என்ஜிஓக்கள் மூலம் பயங்கரவாதத்துக்கு நிதி உதவிகள் செல்வதாகவும், அதனை கண்காணிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+