Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பேஜர் அட்டாக் பின்னணியில் கேரள தொழிலதிபர்? யார் இந்த ரின்சன் ஜோஸ்? ட்விஸ்ட்க்கு மேல் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

பெய்ரூட்: லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தும் 5,000 பேஜர்கள் வெடித்த சம்பவத்தில் இஸ்ரேலின் ‛மொசாட்’ உளவுத்துறை இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அந்த சம்பவத்தின் பின்னணியில் கேரளாவின் தொழிலதிபர் இருக்கும் பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. யார் அந்த கேரளா தொழிலதிபர் ரின்சன் ஜோஸ்? அவருக்கும், பேஜர் வெடிப்புக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.


இஸ்ரேல் - காசா போருக்கு மத்தியில் லெபானில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய பேஜர் அட்டாக்கும், வாக்கி டாக்கி அட்டாக்கும் உலகையே மிரள வைத்து விட்டது. இந்த 2 அட்டாக்கிலும் 32 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். 3000க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் 100க்கும் அதிகமானவர்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகின்றனர். இதனால் உயிர் பலி என்பது அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.

israel hezbollah kerala techie

இந்த பேஜர் மற்றும் வாக்கி - டாக்கி அட்டாக் விஷயத்தில் தோண்ட தோண்ட மர்மங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்த அட்டாக்கை இஸ்ரேலின் ‛மொசாட்’ உளவுத்துறை தான் நடத்தி உள்ளதாக லெபனான் குற்றம்சாட்டி வருகிறது. ஹிஸ்புல்லாவினர் ஆர்டர் செய்த வாக்கி - டாக்கியின் பேட்டரியில் பிஇடிஎன் வெடிப்பொருளை வைத்து வெடிக்க வைத்து இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தி உள்ளதாக லெபனான் தெரிவிக்கிறது.

இதுதான் இஸ்ரேல்.. ஹிஸ்புல்லா கண்ணில் விரலை விட்டு ஆட்டிய மொசாட்! யூனிட் 8200 உளவு படை பற்றி தெரியுமா


இந்த தாக்குதல் நடந்து முடிந்தாலும் கூட தொடர்ந்து பல கேள்விகளுக்கான விடை கிடைக்காமலே உள்ளது. பேஜர், வாக்கி டாக்கிகளை எப்படி ஒரே நேரத்தில் இஸ்ரேலால் வெடிக்க வைக்க முடியும்? வெடிமருந்தை வைத்தது எப்படி? என பல மில்லியன் டாலர் கேள்விகளுக்கு உலகமே விடை தேடி வருகிறது. இத்தகைய சூழலில் தான் இந்த அட்டாக் பற்றி அடுத்தடுத்து புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அப்படி வெளியான ஒரு தகவல் தான் இது. அதாவது இஸ்ரேல் தாக்குதல் பின்னணியில் இந்தியாவில் பிறந்த நம் அண்டை மாநிலமான கேரளா தொழில் அதிபர் ரின்சன் ஜோஸ் என்பவர் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது இந்தியாவையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இவர் யார்? எப்படி இந்த சம்பவத்தில் அவரது பெயர் அடிபட காரணம் முதற்கட்ட விசாரணையில் பல மர்மமூடிச்சுகள் அவிழ்ந்தது தான் காரணம்.

இஸ்ரேலுக்கு சவுதி அரேபியா வார்னிங்.. கோபத்தில் பட்டத்து இளவரசர்! அமெரிக்காவுக்கு பெரிய சிக்கல்


அதாவது வெடித்து சிதறிய பேஜர்கள் எங்கு தயாரிக்கப்பட்டது? என்பது பற்றி முதற்கட்டமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது கிடைத்த பெயர் தான் கோல்ட் அப்போலோ. இது தைவான் தலைநகர் தைபேவில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் பெயரில் தான் பேஜர்கள் ஹிஸ்புல்லாவுக்கு வழங்கப்பட்டது தெரியவந்தது. இதனால் தைவான், இஸ்ரேலுக்கு உதவியதா என்ற சந்தேகம் எழ தொடங்கியது.

இந்த தகவல் வெளியான உடன் கோல்ட் அப்போலோ நிறுவனத்தின் நிறுவன தலைவர் முக்கிய தகவலை கூறினார். அவர், ‛‛வெடித்து சிதறிய ஹிஸ்புல்லாக்களின் பேஜர்களை நாங்கள் தயாரிக்கவில்லை. அந்த பேஜர்களில் எங்களின் பிராண்டுகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. எங்களின் பெயரை பயன்படுத்தி சில நிறுவனங்கள் அங்கீகாரம் கொடுத்துள்ளோம். எங்களின் லைசென்ஸை பயன்படுத்தி ஹங்கேரி நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிஏசி கன்சல்டிங் நிறுவனம் தான் இந்த பேஜர்களை தயாரித்து வழங்கி உள்ளது’’ என்று கூறி நழுவினார்.

இதன்மூலம் தைவானின் கோல்ட் அப்போலோ நிறுவனம் ஹங்கேரியின் பிஏசி நிறுவனத்தை கைக்காட்டி தப்பித்தது. இதையடுத்து அனைவரின் பார்வையும் ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் செயல்பட்டு வரும் பிஏசி கன்சல்டிங் நிறுவனம் பற்றி திரும்பியது. இந்த பிஏசி நிறுவனம் பற்றி விசாரித்தபோது அடுத்த அதிர்ச்சி கிடைத்தது. அதாவது பிஏசி கன்சல்டிங் நிறுவனத்துக்கு புடாபெஸ்ட் நகரில் சொந்தமாக அலுவலகம் என்பது கூட இல்லை. அது ஒரு Shell கம்பெனியாக பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. அந்த நிறுவனம் எந்த எலக்ட்ரானிக் சாதனத்தையும் தயாரிக்கவில்லை என்பதும், அந்த நிறுவனம் பிற நிறுவனத்திடம் இருந்து பொருட்களை வாங்கி வழங்கும் வகையிலான இடைத்தரகர் பணியை செய்யும் நிறுவனம் என்பது தெரியவந்தது.

மேலும் பிஏசி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டியானா பார்சோனி ஆர்சிடியாகோனா (Cristiana Bársony-Arcidiacono) என்பது தெரியவந்தது. அதோடு அவர் பேஜர்களை பல்கேரியா தலைநகர் சோபியாவில் செயல்பட்டு வரும் நார்த்தா குளோபல் லிமிடெட் எனும் நிறுவனத்துக்கு பேஜர் தயாரிக்க ஆர்டர் கொடுத்ததும் தெரியவந்தது. இந்த நார்த்தா குளோபல் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர் பெயர் தான் ரின்சன் ஜோஸ். இவர் கேரளாவின் வயநாடு மாவட்டத்தின் மானந்தவாடி கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை பெயர் ஜோஸ். .இவர் டெய்லர் தொழில் செய்தார். இவரை அந்த பகுதி மக்கள் ஜோஸ் டெய்லர் என்றே அழைத்து வந்துள்ளனர். ரின்சன் ஜோஸ் எம்பிஏ படித்த பிறகு நார்வேக்கு குடியேறினார்.

அதன்பிறகு நார்வே குடியுரிமை வாங்கி அங்கேயே செட்டில் ஆனார். இந்த வேளையில் தான் ரின்சன் ஜோஸ் பல்கேரியாவில் நார்த்தா குளோபல் நிறுவனத்தை 2022ல் தொடங்கி உள்ளார். இந்த நிறுவனம் ஹிஸ்புல்லா ஆர்டர் செய்த பேஜர்களை தைவானின் கோல்ட் அப்போலோ பிராண்டின் பெயரில் ஹங்கேரியில் செயல்பட்டு வரும் பிஏசி கன்சல்டன்ட் நிறுவனம் வழியாக ஹிஸ்புல்லாவுக்கு அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

ரின்சன் ஜோஸ் நிறுவனம் பற்றிய செய்தி வெளியானதும் கேரளாவில் இருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்களை தொடர்பு கொள்ள பத்திரிகையாளர்கள் முயன்றனர். இதனால் அவரகள் பதறிப்போயினர். இதுபற்றி உறவினர் அஜு ஜான் கூறுகையில், ‛‛ரின்சனுக்கு பல்கேரியாவில் இப்படியொரு நிறுவனம் இருப்பதே எங்களுக்கு தெரியாது. தனது நிறுவனம் பற்றியோ அல்லது தான் செய்து வரும் பிஸ்னஸ் பற்றியோ ரின்சன் சொன்னதே இல்லை. பயங்கரவாத அமைப்பு மீது நடந்த தாக்குதல் தொடர்பான விவகாரத்தில் ரின்சன் பெயரை தொடர்புப்படுத்தி கூறுவது கவலையாக உள்ளது’’ என வருந்தினார்.

இருப்பினும் கூட இந்த விஷயத்தில் இன்னும் மர்மம் நீடிக்கிறது. ஏனென்றால் ரின்சன் ஜோஸின் நிறுவனம் தான் பேஜரை தயாரிப்புக்கான ஆர்டரை ஹங்கேரியின் பிஏசி கன்சல்டன்ட் நிறுவனத்திடம் இருந்து பெற்றதாக கூறினாலும் கூட உண்மையில் ஹிஸ்புல்லாக்களின் பேஜர்களை யார் தயாரித்தது என்பதில் இன்னும் பெரிய அளவில் தெளிவு கிடைக்கவில்லை. இதற்கு பல்கேரியா நாட்டின் தேசிய பாதுகாப்பு ஏஜென்சியான SANS சொன்ன தகவல் தான் காரணம். இதுதொடர்பாக SANS, ‛‛ரின்சன் ஜோஸின் பல்கேரியா நிறுவனத்திடம் இருந்து குறித்த பேஜர் தொடர்பான எந்த சரக்கும் ஏற்றுமதி செய்யப்படவில்லை’’ என தெரிவித்துள்ளது. அதேபோல் ரின்சன் ஜோஸ் இப்போது எங்கிருக்கிறார்? என்பதும் தெரியவில்லை. அவரோ அல்லது அவருடைய நிறுவனமோ இதுபற்றி எந்த தகவலையும் இன்னும் சொல்வில்லை. இது தற்போது மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த குழப்பத்துக்கு நடுவே தான் ஹங்கேரியில் பிஏசி கன்சல்ட் நிறுவனம் பற்றிய இன்னொரு தகவலும் பரவி வருகிறது. அதாவது அந்த பிஏசி கன்சல்டன்ட் நிறுவனத்தை தொடங்கியதே இஸ்ரேல் தான். இஸ்ரேலின் மொசாட் உளவுத்துறை தான் Shell நிறுவனமாக தொடங்கி ஹிஸ்புல்லாவிடம் இருந்து பேஜர் தயாரிப்பு ஆர்டரை எடுத்து ரின்சன் ஜோஸின் நிறுவனத்துக்கு வழங்கிதாகவும் கூறப்படுகிறது. இது பற்றி இன்னும் இஸ்ரேல் வாய்த்திறக்கவில்லை. இதனால் கன்னித்தீவு கதையாக ஹிஸ்புல்லாவின் பேஜர் வெடிப்பின் பின்னணி பற்றிய மர்மம் தொடர்ந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+