இஸ்ரேலுக்கு சவுதி அரேபியா வார்னிங்.. கோபத்தில் பட்டத்து இளவரசர்! அமெரிக்காவுக்கு பெரிய சிக்கல்
ரியாத்: பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. அதேபோல் லெபனான் நாட்டில் இருந்து குடைச்சல் தரும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு பேஜர், வாக்கி டாக்கியை வெடிக்க வைத்து இஸ்ரேல் உளவுத்துறை ‛மொசாட்’ அதிர வைத்துள்ளது. இந்நிலையில் தான் இஸ்ரேலுக்கு சவூதி அரேபியாவிடம் இருந்து வார்னிங் மெசேஜ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவுக்கு புது சிக்கல் ஏற்பட உள்ளது.
ஹமாஸ் அமைப்புக்கு எதிராக பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் போர் தொடங்கி நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ம் தேதி இந்த போர் தொடங்கியது. இன்னும் போர் முடியவில்லை. இந்நிலையில் தான் போர் நடவடிக்கைக்கு எதிராக அண்டை நாடான லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த ஹிஸ்புல்லா அமைப்பு ஈரான் ஆதரவில் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் உள்ள நிலையில் அந்த நாட்டின் ஆதரவில் ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது ஏவுகனை தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில் தான் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வரும் பேஜர்கள், வாக்கி டாக்கிகள் அடுத்தடுத்து வெடித்து சிதறின.
இதில் மொத்தம் 32 பேர் பலியான நிலையில், 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலின் ‛மொசாட்’ உளவுத்துறை தான் காரணம் என்று லெபனான் கூறியுள்ளது. கடந்த ஏப்ரல், மே மாதம் வெளிநாட்டில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட பேஜர், வாக்கி டாக்கிகளை இடைமறித்து அதில் PETN எனும் வெடிபொருட்களை வைத்து இஸ்ரேல் வெடிக்க செய்துள்ளதாக லெபனான் கூறியுள்ளது. இதற்கு இஸ்ரேல் பொறுப்பு ஏற்று விளக்கம் அல்லது மறுப்பு என எதையும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறது.
இஸ்ரேலின் பெரிய சதி.. உள்ளே இருந்த வெடிப்பொருள்! லெபனானில் 5000 பேஜர்கள் வெடித்தது எப்படி? பகீர்
இந்நிலையில் தான் பாலஸ்தீனம் விவகாரத்தில் இஸ்ரேல் மீது சவூதி அரேபியா கடும் கோபமடைந்துள்ளது. சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இஸ்ரேலை கண்டித்தும், வார்னிங் செய்தும் பேசியுள்ளார். அதாவது சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ரியாத்தில் உள்ள ஷூரா கவுன்சிலில் ஆண்டு உரையை நிகழ்த்தினார். அப்போது தான் இஸ்ரேலை வார்னிங் செய்துள்ளார். இதுதொடர்பாக முகமது பில் சல்மான் பேசியதாவது:
உலகப்போர் பீதி.. அமெரிக்காவை விட்டு ஈரானுடன் சேரும் சவூதி? இஸ்ரேலால் ஒன்றிணையும் இஸ்லாமிய நாடுகள்!
கிழக்கு ஜெருசலேமை தலைநகராக கொண்டு பாலஸ்தீன நாட்டை உருவாக்கும் வகையில் இஸ்ரேல் உடன் சவூதி அரேபியா நல் உறவவை வைக்காது. அதேபோல் கிழக்கு ஜெருசலேமை தலைநகராக கொண்டு சுதந்திரமான பாலஸ்தீன நாட்டை உருவாக்கும் முயற்சியை சவூதி அரேபியா ஒருபோதும் நிறுத்தாது. இந்த முயற்சி கைக்கூடும் வரை சவூதி அரேபியா - இஸ்ரேல் உடன் தூதரக உறவுகளை ஏற்படுத்தாது. இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை மீறி குற்றங்களை செய்து வருகிறது.
நம்மை பொறுத்தவரை பாலஸ்தீனம் தான் முக்கியமானது. அதற்கு தான் முதன்மை உரிமை கொடுக்கப்படும். பலாஸ்தீனத்தில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கும், அங்கு மக்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதலுக்கும் கண்டனம் தெரிவித்து தெரிவிக்கிறோம். இத்தகைய நடவடிக்கையை இஸ்ரேல் உடனடியாக கைவிட வேண்டும். பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அங்கீகரித்துள்ள நாடுகளுக்கு நாங்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம். அதேபோல் பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று மற்ற நாடுகளுக்கும் கோரிக்கை வைக்கிறோம்’’ என பேசினார்.
இந்த பேச்சு தான் தற்போது அமெரிக்காவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அதாவது பொதுவாகவே இஸ்ரேல் - சவூதி அரேபியா இடையே தற்போது எப்போதுமே நெருக்கமான உறவு என்பது இருந்தது இல்லை. இதற்கு முக்கிய காரணம் இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான மோதல் தான். இருப்பினும் சவூதி அரேபியா - அமெரிக்கா இடையே நல்ல உறவு தொடர்ந்து வருகிறது. இருநாடுகளும் பல ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. அதேபோல் அமெரிக்கா - இஸ்ரேல் இடையே நெருங்கிய உறவு உள்ளது. இதனால் சவூதி அரேபியா - இஸ்ரேலை நட்பாக்க அமெரிக்கா முயன்றது.
அலறும் ஹிஸ்புல்லா.. பேஜர், வாக்கி டாக்கியால் சொல்லியடித்த இஸ்ரேல்! வார்னிங்கை மிஸ் செய்த லெபனான்
2020-2021 காலக்கட்டத்தில் அமெரிக்கா இதற்கான ஸ்டெப்புகளை மேற்கொண்டது. இருநாடுகள் இடையேயும் நல்ல உறவை கொண்டு வர முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் தற்போதைய அதிபர் ஜோ பைடன் முயன்றனர். இதனால் விரைவில் இருநாடுகள் இடையே சுமூக உறவு ஏற்படும் என்று நினைக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு அக்டோபர் 7 ம் தேதி பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் உருவாகி போர் தொடங்கியது.
இதையடுத்து சவூதி அரேபியா, இஸ்ரேலை கண்டிக்க தொடங்கியது. இதனால் நெருங்கி வந்த சவூதி அரேபியா - இஸ்ரேல் உறவில் மீண்டும் பிரச்சனை உருவானது. இருநாடுகளும் வெவ்வேறு திசைகளில் பயணிக்க தொடங்கின. தற்போது பாலஸ்தீனத்தின் காசா மீதான போருக்கு இடையேயும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளது. ஆனால் சவூதி அரேபியா பாலஸ்தீனம் தனி நாடு கோரிக்கையை முன்வைத்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலுக்கு எதிராக எந்த தாக்குதல் திட்டத்தையும், இஸ்ரேலுக்கு எதிரான செயல்பாட்டில் ஈடுபடுவோருக்கும் சவூதி அரேபியா உதவி செய்யவில்லை.
இந்நிலையில் தான் தற்போது பேஜர் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இஸ்ரேலை, சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் வார்னிங் செய்துள்ளார். அதாவது கிழக்கு ஜெருசலேமை தலைநகராக்கி பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அறிவிக்கும் வரை இஸ்ரேலுடன் எந்த உறவும் வைத்து கொள்ளமாட்டோம் என கூறியுள்ளார். இதனால் அமெரிக்காவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் பாலஸ்தீனம், லெபனான் உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் பட்சத்தில் அதனை நிறுத்த நடவடிக்கை எடுக்கும்படி அமெரிக்காவிடம், சவூதி அரேபியா கோரிக்கை வைக்கலாம். இதற்கு ஒப்புக்கொள்ளாத பட்சத்தில் சவூதி அரேபியா - அமெரிக்கா இடையேயான நல்ல உறவில் விரிசல் ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications