அலறும் ஹிஸ்புல்லா.. பேஜர், வாக்கி டாக்கியால் சொல்லியடித்த இஸ்ரேல்! வார்னிங்கை மிஸ் செய்த லெபனான்
பெய்ரூட்: லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தும் பேஜர்கள், வாக்கி டாக்கிகள் அடுத்தடுத்து வெடித்து சிதறுகின்றன. இதில் 32 பேர் பலியான நிலையில் 3 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலின் உளவு அமைப்பான ‛மொசாட்' தான் காரணம். இந்நிலையில் தான் ‛கற்காலத்துக்கு உங்களை தள்ள முடியும்' என்று 3 மாதத்துக்கு முன்பே இஸ்ரேல் எச்சரித்தும், லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் கோட்டை விட்டது தெரியவந்துள்ளது.
இஸ்ரேலும் - லெபனானும் அண்டை நாடுகள். இருநாடுகளும் எல்லைகளை பகிர்ந்து வருகின்றன. இந்நிலையில் தான் இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் நோக்கில் போர் தொடுத்து வருகிறது. இதற்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்து போரை நிறுத்த கூறிவருகிறது. இஸ்ரேல் அதற்கு செவி சாய்க்கவில்லை.

இதனால் இஸ்ரேல் மீது கடும் கோபத்தில் ஈரான் உள்ளது. ஈரான் நேரடியாக எல்லையை பகிர்ந்து கொள்ளாததால் அந்த நாட்டால் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த முடியவில்லை. இதனால் வான்வெளி தாக்குதலும் பிற நாட்டின் வான்வெளி வழியாக நடத்த வேண்டும் என்பதால் ஈரான் மாற்று யோசனையை கையில் எடுத்தது.
அதாவது இஸ்ரேலுக்கு பாடம் கற்கபிக்க ஈரான் தனது ஆதரவில் லெபனானில் இயங்கும் ஹிஸ்புல்லா அமைப்பை பயன்படுத்தி வருகிறது. இஸ்ரேல் காசா மீது நடத்தும் தாக்குதலுக்கு பதிலடியாக ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துகிறது. இது இஸ்ரேலுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஒருபுறம் காசாவில் போர் நடத்தும் இஸ்ரேல் மறுபுறம் லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பின் ஏவுகணை தாக்குதலையும் முறியடித்து பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில் தான் லெபனான் நாட்டில் அடுத்தடுத்து இரட்டை தாக்குதல் நடந்துள்ளது. முதலில் 5000 பேஜர்கள் வெடித்த நிலையில் நேற்று வாக்கி டாக்கிகள் வெடித்து சிதறின. ஹிஸ்புல்லா அமைப்பினர் மெசேஜ் பரிமாறி கொள்ள பயன்படுத்தும் பேஜர்கள், வாக்கி டாக்கிகள் வெடித்து சிதறியதில் இதுவரை 32 பேர் பலியாகி உள்ளனர். 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த 2 தாக்குதலுக்கும் இஸ்ரேலின் உளவு அமைப்பான ‛மொசாட்' தான் காரணம் என லெபனான் கூறி வருகிறது.
அதாவது ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தும் பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகளில் PETN எனும் வெடிபொருட்களை பேட்டரியில் வைத்திருக்கிறார்கள். ஒவ்வொன்றிலும் 3 கிராம் வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. பல மாதங்களால் அதை ஹிஸ்புல்லா அமைப்பினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதுதான் இப்போது வெடித்துச் சிதறியுள்ளது. இதில் வெடித்து சிதறிய பேஜர்கள், வாக்கி டாக்கிகளை தைவானின் கோல்ட் அப்போலோ நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற நிறுவனத்திடம் இருந்து கடந்த ஏப்ரல், மே மாதத்தில் வாங்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் அந்த பொருட்களை இடைமறித்து தான் இஸ்ரேலின் ‛மொசாட்' உளவுத்துறை வெடிப்பொருட்களை வைத்து தற்போது ஒரே நேரத்தில் வெடிக்க செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் தான் பேஜர், வாக்கி டாக்கி தாக்குதல் தொடர்பாக கடந்த ஜூன் மாதமே இஸ்ரேல் லெபனான் மற்றும் ஹிஸ்புல்லாவுக்கு வார்னிங் செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் இந்த தாக்குதலே சரியான திட்டமிடலுடன் தான் இஸ்ரேல் நடத்தி உள்ளது தெரியவந்துள்ளது. அதாவது காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனானின் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் கடந்த ஆண்டு முதல் தொடர்ந்து வருகிறது. பதிலுக்கு இஸ்ரேலும், ஹிஸ்புல்லா மீது தாக்குதல் நடத்துகிறது.
இத்தகைய சூழலில் தான் கடந்த ஜுன் மாதம் இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அமைச்சர் Yoav Gallant வாஷிங்டன் டிசியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த வேளையில் இஸ்ரேல் - லெபனான் ஹிஸ்புல்லா மோதல் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் ‛‛இஸ்ரேல், லெபனான் நாட்டுடன் போரிட விரும்பவில்லை. அதேவேளையில் நாங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப தயாராகி வருகிறோம்.
லெபனான் உடன் நாங்கள் போருக்கு சென்றால் அவர்களுக்கு பெரும் சேதத்தை விளைவிக்க முடியும். இது லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் நன்கும் தெரியும். ஆனால் நாங்கள் அதை விரும்பவில்லை. மேலும் லெபனான் ஒன்றை நினைவில் வைத்து கொள்ள வேண்டும். எங்களால் அந்த நாட்டை கற்காலத்துக்கே அனுப்பி வைக்க முடியும்'' என கூறியிருந்தார்.
இந்நிலையில் தான் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சரின் இந்த பேச்சு என்பது தற்போதைய பேஜர் மற்றும் வாக்கி - டாக்கி தாக்குதலுடன் தொடர்புப்படுத்தி கூறப்பட்டு வருகிறது. அதாவது இஸ்ரேல் பல்வேறு தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குகிறது. இதனால் இஸ்ரேலுக்கு எதிரான சதி வேலைகளில் ஈடுபட்டு வரும் லெபனானில் இயங்கும் ஹிஸ்புல்லா அமைப்பினர் செல்போன் பயன்படுத்துவது இல்லை.
செல்போன் பயன்படுத்தி இஸ்ரேலுக்கு எதிரான திட்டங்களை தீட்டும்போது அதனை அந்த நாடு கண்டுபிடித்து விட முடியும். செல்போன் ஓட்டு கேட்பு, செல்போன் இருக்கும் இடத்தை சிக்னல் வழியாக கண்டுபிடிக்க முடியும் என்பதால் ஹிஸ்புல்லா அமைப்பினர் பேஜர் மற்றும் வாக்கி - டாக்கிகளை பயன்படுத்தி வந்தனர். செல்போனை ஒப்பிடும்போது பேஜர், வாக்கி - டாக்கிகள் பழைய தொழில்நுட்பமாகும். இந்த தொழில்நுட்பத்தில் ஹிஸ்புல்லாக்கள் பயன்படுத்தும் நிலையில் அதனையும் தங்களால் முறியடிக்க முடியும் என்பதை தான் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் கடந்த ஜுன் மாதம் தெரிவித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது ஏற்கனவே செல்போன் பயன்படுத்தாத நிலையில் பேஜர், வாக்கி - டாக்கிகளையும் வெடிக்க வைத்துள்ளதால் இனி அதனை பயன்படுத்த ஹிஸ்புல்லா அமைப்பினர் பயப்படுவார்கள். இதனால் அவர்கள் இனி எந்த வகையில் தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்துவார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை அவர்கள் தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தாமல் இருந்தால் அது கற்கால மனிதன் வாழ்க்கையை போல் இருக்கும். இந்நிலையில் தான் பேஜர், வாக்கி டாக்கி தாக்குதலை மனதில் வைத்து தான் லெபனானை எங்களால் கற்காலத்துக்கு கொண்டு செல்ல முடியும் என்று இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
-
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
அது வேற வாய்.. இது வேற வாய்! பாகிஸ்தானை அசிங்கப்படுத்திய ஈரான்! அடுத்த நாளே திடீர் ட்விஸ்ட்! என்ன? -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது












Click it and Unblock the Notifications