மீண்டும் தொடங்கியது விமான சேவை.. துபாய் & அபுதாபியில் இருந்து இந்தியாவுக்கு விமானங்கள் இயக்கம்!
டெல்லி: மத்திய கிழக்கில் ஏற்பட்ட பதற்றம் காரணமாகக் கடந்த சில நாட்களாகவே மத்திய கிழக்கு பிராந்தியத்தில் விமானச் சேவை முழுமையாக நிறுத்தப்பட்டு இருந்தது. இதற்கிடையே இப்போது குறைந்த அளவு விமானச் சேவைகள் அங்கிருந்து தொடங்கப்பட்டுள்ளன. இதனால் மத்திய கிழக்கில் சிக்கியுள்ள சுற்றுலாப் பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இஸ்ரேல் - ஈரானுக்கு இடையேயான பதற்றம் காரணமாகக் கடந்த சில நாட்களாக மத்திய கிழக்கில் விமானச் சேவை மொத்தமாக முடங்கி இருந்தது. இதற்கிடையே இப்போது ஐக்கிய அமீரகத்தில் இருந்து விமானச் சேவைகள் மீண்டும் தொடங்குகின்றன. துபாய், அபுதாபியில் இருந்து குறைந்த அளவு விமானச் சேவைகளைத் தொடங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மீண்டும் விமானச் சேவை
முதற்கட்டமாக அங்குச் சிக்கியிருந்த பயணிகளை ஏற்றிக் கொண்டு முதல் அபுதாபி விமானம் திங்கள் இரவு டெல்லி வந்தடைந்தது. எத்தியாட் விமானம் EY216 அபுதாபியில் பிற்பகல் 3:42 மணிக்குப் புறப்பட்டு, இரவு 8:31 மணிக்கு டெல்லியில் தரையிறங்கியது. வான்வெளி கட்டுப்பாடுகளுக்குப் பிறகு திங்கள் மாலை முதல் சில சேவைகள் மீண்டும் தொடங்கும் என்று விமான நிறுவனங்கள் அறிவித்ததால், ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு நிம்மதி கிடைத்தது.
ஃபிளைதுபாய் விமான நிறுவனம் முதற்கட்டமாகக் குறைந்த அளவு விமானங்களுடன் தனது விமானச் சேவையைத் தொடங்கும் என்பதை உறுதிப்படுத்தியது. மார்ச் 3ம் தேதி முதல் ஃபிளைதுபாய் குறைந்த எண்ணிக்கையில் விமானங்களை இயக்கும். வாடிக்கையாளர்கள் விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன், தங்களது தொடர்பு விவரங்களை 'Manage Your Booking'ல் சரிபார்க்கக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
எமிரேட்ஸ்
அதேபோல எமிரேட்ஸ் விமானமும் குறைந்த அளவு சேவைகளை மீண்டும் தொடங்குவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்கவுள்ளதாகவும் கூறியது. ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் எமிரேட்ஸ் நிறுவனமே தகுதியான பயணிகளை நேரடியாகத் தொடர்பு கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமானச் சேவை தொடர்பாகத் தகவல் பகிரப்படும் வரை விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எமிரேட்ஸ் மேலும் கூறுகையில். "இப்போது மிகக் குறைந்த அளவிலேயே விமானச் சேவை இயக்கப்படுகிறது. மறு அறிவிப்பு வரும் இது தொடும்.நிலைமையைக் கண்காணித்து, அதற்கேற்ப அட்டவணையை எமிரேட்ஸ் உருவாக்கும். நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக வலைத்தள கணக்கில் இது தொடர்பான தகவல்களைப் பார்க்கலாம்! பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு எங்கள் முதன்மையான முன்னுரிமை" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபுதாபி
அபுதாபி விமான நிலையமும் திங்கள் பிற்பகல் முதல் விமானச் சேவைகள் மீண்டும் பகுதியளவு தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோதலால் சிக்கிய பயணிகளை வெளியேற்ற, மூன்று மணி நேரத்திற்குள் 15க்கும் மேற்பட்ட எத்தியாட் ஏர்வேஸ் விமானங்கள் அபுதாபியில் இருந்து புறப்பட்டன.
இந்திய விமானங்கள்
மத்திய கிழக்கிற்குச் செல்லும் 357 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ள நிலையில், குறைந்த எண்ணிக்கையில் விமானச் சேவை மீண்டும் தொடங்குகிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மார்ச் 3ம் தேதி முதல் மஸ்கட்டில் இருந்து டெல்லி, கொச்சி, கோழிக்கோடு, மங்களூரு, மும்பை, திருச்சிக்குச் சேவைகளை மீண்டும் தொடங்கும். மஸ்கட்டில் இருந்து திருச்சிக்குச் செல்லும் முதல் விமானம் உள்ளூர் நேரப்படி காலை 10:25 மணிக்குப் புறப்படும்.
அதேநேரம் பஹ்ரைன், குவைத், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம் செல்லும் விமானச் சேவை இன்று இரவு வரை நிறுத்தப்பட்டே இருக்கும் என ஏர் இந்தியா கூறியுள்ளது..
துபாய் ஏர்போர்ட்
இந்த மோதலின் போது துபாய் விமான நிலையத்தின் மீது ஈரான் தாக்குதல்களை நடத்தியது. உலகின் மிகவும் பரபரப்பான ஏர்போர்ட்களில் ஒன்றான துபாய் சர்வதேச விமான நிலையம், மோதலின் போது இரண்டு முறை தாக்குதலுக்குள்ளானது. அமெரிக்கா, இஸ்ரேல் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தியதால் நான்கு பேர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐக்கிய அமீரகம் உட்பட மத்திய கிழக்கு நாடுகள் தங்கள் வான்வெளியை மூடுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications