Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரெய்டு நடந்ததும் கட்சிகளுக்கு கோடிகளில் நன்கொடையா?.. நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கத்தை பாருங்க

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமலாக்கத்துறை விசாரணை வளையத்திற்குள் சிக்கிய நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகளை அதிக அளவில் கொட்டி கொடுத்து இருப்பது தொடர்பான கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார். அவர் அளித்த விளக்கத்தை இங்கே விரிவாக பார்க்கலாம்.

தேர்தல் பத்திர விவரங்களை மார்ச் 12 ல் வெளியிட உச்ச நீதிமன்றம் எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்ட நிலையில், அந்த விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ வழங்கியது. இந்த நிலையில் நேற்று மாலை அந்த பத்திரங்களை தேர்தல் ஆணையம் பொதுவில் வெளியிட்டது. தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு பல கோடிகளை நிறுவனங்கள் கொட்டி கொடுத்துள்ளன.

Links between probe agency raids election bonds are assumptions Says Minister Nirmala Sitharaman

குறிப்பாக அமலாக்கத்துறை ரெய்டு நடந்த கால கட்டங்களில் பல நூறு கோடிகளை கட்சிகளுக்கு நிறுவனங்கள் நன்கொடையாக கொடுத்துள்ளன. லாட்டரி மார்ட்டின் விசாரணை வளையத்தில் இருந்த போது சுமார் ஆயிரம் கோடி அளவுக்கு தேர்தல் பத்திரம் மூலமாக நன்கொடை அளித்துள்ளார். இதுபோன்ற பல நிறுவனங்கள் நன்கொடையாக அளித்து இருந்தன. அதாவது அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்த 30 கம்பெனிகளில் 15 நிறுவனங்கள் விசாரணை அமைப்புகளின் வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டவையாகும்.

இரண்டாவது கற்பனை என்னவென்றால்: இந்த நிலையில், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இது தொடர்பாக கேட்கப்பட்ட போது அவர் பதிலளித்துள்ளார். நிர்மலா சீதாராமன் அளித்த பதிலில், ரெய்டு நடந்ததையும் டொனேஷன் அளித்ததையும் தொடர்பு படுத்துவது வெறும் அனுமானம் (assumptions) தான் என்று பதிலளித்துள்ளார். அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி கடந்த 2013 ஆம் ஆண்டு கொண்டு வந்த தேர்தல் டிரஸ்ட்ஸ் திட்டம் என்று முற்றிலும் பொருத்தமற்ற ஒன்றாகும்" என்றார்.

தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன், "நிறுவனங்கள் பணம் கொடுத்த பிறகும் நாங்கள், அமலாக்கத்துறை மூலம் அவர்களின் கதவை நாங்கள் ஏன் தட்டியிருக்க கூடாது? அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதும் அவர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள நன்கொடை அளித்ததாக கூறுவது வெறும் கற்பனைதான். இதில் இரண்டாவது கற்பனை என்னவென்றால், அந்த நிறுவனம் பாஜகவுக்குதான் கொடுத்தார்கள் என்பது உங்களுக்கு உறுதியாக தெரியுமா? அவர்கள் பிராந்திய கட்சிகளுக்கு கூட கொடுத்து இருக்கலாம்" என்றார்.

தேர்தல் பத்திரங்கள்: தேர்தல் பத்திரங்கள் திட்டம் கடந்த 2017ம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. தேர்தல் பத்திரங்கள் என்பது தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்தாமல், அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்க அனுமதிக்கும் திட்டம் ஆகும். இத்திட்டத்தின் விதிகளின்படி, இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் அல்லது நாட்டில் இணைக்கப்பட்ட அல்லது நிறுவப்பட்ட எந்த நிறுவனமும் தேர்தல் பத்திரங்களை வாங்கலாம்.

இந்த பத்திரங்கள் ₹ 1,000 முதல் ₹ 1 கோடி வரையிலான பல்வேறு மதிப்புகளில் கிடைக்கின்றன, மேலும் பாரத ஸ்டேட் வங்கியின் சில கிளைகளில் பெறலாம். இந்த நன்கொடைகளுக்கு வட்டியும் இல்லை. இந்த பத்திரங்களை பெயரை வெளிப்படுத்தாமல் எந்த கட்சிக்கும் கொடுக்கலாம். இதன் மூலம் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை அரசியல் கட்சிகள் பெற்றால் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க தேவை இல்லை என மாற்றிவிட்டது. இந்த நிலையில்தான் தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான வழக்கில், நாடு முழுக்க தேர்தல் பத்திரங்களை உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+