லாக்டவுன் 4.0.. அலுவலகங்கள், நிறுவனங்கள் இயங்கலாம்.. ஆனால் முக்கிய கட்டுப்பாடுகள்.. முழு விபரம்!

லாக்டவுன் 4.0ல் இந்தியா முழுக்க அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லாக்டவுன் 4.0ல் இந்தியா முழுக்க அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டள்ளது.

Recommended Video

    Lockdown 4.0 : யாருக்கு என்ன தளர்வு... முழு தகவல்

    மூன்று லாக்டவுன்களை தொடர்ந்து நாடு முழுக்க லாக்டவுன் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய கட்டுப்பாடுகள், தளர்வுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விவரங்களை வெளியிட்டுள்ளது.

    முக்கியமாக இந்திய பொருளாதாரத்தை மீட்கும் வகையில் சிலர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் நிறுவனங்கள் இயங்க தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    அலுவலகங்கள் எப்படி

    அலுவலகங்கள் எப்படி

    இந்த நிலையில் லாக்டவுன் 4.0ல் இந்தியா முழுக்க அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டள்ளது. அதோடு மார்க்கெட் பகுதிகள், ஷாப்பிங் காம்பிளக்ஸ் பகுதிகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணிகள் தொடங்க வாய்ப்புள்ளது. அதே சமயம் இப்படி நிறுவனங்கள் இயங்க நிறைய கட்டுப்பாடுகள் விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    உற்பத்தி நிறுவனங்கள்

    உற்பத்தி நிறுவனங்கள்

    உற்பத்தி தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள் எப்போதும் போல இயங்கலாம். ஆனால் முடிந்த அளவு நிறுவனங்கள் வீட்டில் இருந்து பணியை மேற்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும். அனைத்து நிறுவனங்களிலும் தெர்மல் சோதனை கருவிகள் இருக்க வேண்டும். தினமும் எல்லா பணியாளர்களுக்கும் தெர்மல் சோதனைகளை செய்ய வேண்டும். எல்லா அலுவலகத்திலும் கிருமி நாசினிகளை வைக்க வேண்டும்.

    குறைந்த அளவு பணியாளர்கள்

    குறைந்த அளவு பணியாளர்கள்

    அதேபோல் குறைந்த அளவில் பணியாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். ஷிப்ட் முறையில் பணியாளர்களை பணிக்கு அழைக்கலாம். அலுவலக கூட்டங்களை நடத்த கூடாது. குறிப்பிட்ட சமூக இடைவெளிவிட்டு பணியாளர்களை வேலைபார்க்க அறிவுறுத்த வேண்டும். உணவு இடைவேளை ஒரே நேரத்தில் இருக்க கூடாது . ஒரே நேரத்தில் ஒன்றாக கூட கூடாது.

    ஆரோக்ய சேது ஆப்

    ஆரோக்ய சேது ஆப்

    அதேபோல் நாடு முழுக்க அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் மத்திய அரசின் ஆரோக்ய சேது செயலியை பயன்படுத்துவது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பிற்காக மத்திய அரசு ஆரோக்யாசேது (AarogyaSetu) என்ற ஆப்பை வெளியிட்டுள்ளது. இந்த செயலி நாடு முழுக்க மத்திய அரசால் பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது.மக்கள் கண்டிப்பாக இந்த செயலியை பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. நீங்கள் இருக்கும் இடம், உங்களுக்கு அருகே இருக்கும் நபர்கள் மூலம் உங்களுக்கு எந்த அளவிற்கு கொரோனா பரவ வாய்ப்புள்ளது என்பதை வைத்து இந்த ஆப் செயல்படும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+