லோக்சபா ஒருநாள் முன்கூட்டியே ஒத்திவைப்பு- ராகுல் காந்தியின் நீட் விவாதம் கோரிக்கை நிராகரிப்பு!
டெல்லி: 18-வது லோக்சபாவின் முதலாவது கூட்டத் தொடர் ஒருநாள் முன்கூட்டியே மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. லோக்சபாவில் நாளை நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியிருந்தார். ராகுல் காந்தியின் கோரிக்கையை நிராகரித்து லோக்சபா ஒருநாள் முன்கூட்டியே ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
18-வது லோக்சபாவின் முதலாவது கூட்டத் தொடர் ஜூன் 24-ந் தேதி தொடங்கியது. முதல் 2 நாட்களும் புதிய எம்பிக்கள் பதவியேற்றனர்.

இதனையடுத்து லோக்சபா சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. லோக்சபா சபாநாயகர் பதவிக்கு 48 ஆண்டுகளுக்குப் பின் தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தலில் பாஜகவின் ஓம் பிர்லா சபாநாயகராக தேர்வானார். 17-வது லோக்சபா சபாநாயகராகவும் பதவி வகித்தவர் ஓம் பிர்லா.
பின்னர் ஜூன் 27-ந் தேதி ராஜ்யசபா கூடியது. அன்றைய தினம் லோக்சபா- ராஜ்யசபா கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து இரு சபைகளிலும் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதங்களுக்கு பிரதமர் மோடி இன்று லோக்சபாவில் பதிலளித்தார்.
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதங்கள் அனல் பறந்தன. எதிர்க்கட்சித் ராகுல் காந்தி பேசும் போது பிரதமர் மோடி உட்பட மத்திய அமைச்சர்கள் 50 முறை குறுக்கிட்டனர். லோக்சபாவில் இன்று பிரதமர் மோடியும் சரமாரியாக பதிலடி கொடுத்தார். அப்போது எதிர்க்கட்சி எம்பிக்கள் இடைவிடாமல் முழக்கங்கள் எழுப்பினர்.
இதனிடையே லோக்சபாவில் நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணி எம்பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். இன்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் மீதான விவாதம் நிறைவடைந்ததால் நாளை லோக்சபாவில் நீட் முறைகேடுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதமும் அனுப்பி இருந்தார்.
இந்த நிலையில் லோக்சபா ஒருநாள் முன்னதாகவே திடீரென மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் லோக்சபாவில் நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பான விவாதம் நடத்த வேண்டும் என்ற ராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications