டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

7 கட்டமாக லோக்சபா தேர்தல்.. முதல் கட்ட வாக்குப் பதிவு ஏப்.11... வாக்கு எண்ணிக்கை மே 23

2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகளை இன்று மாலை தேர்தல் ஆணையம் அறிவிக்க இருக்கிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

2019 லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்டது. இதற்கான பிரச்சாரம் தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் லோக்சபா தேர்தல் தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 7 கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் 2வது கட்ட வாக்குப் பதிவின்போது தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரிக்கு தேர்தல் நடைபெறும். வாக்குப் பதிவு ஏப்ரல் 18ம் தேதி நடைபெறும்.

ஏப்ரல் 18ம் தேதியே நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து காலியாக உள்ள 2! சட்டசபைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபேறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Newest First Oldest First
7:10 PM, 10 Mar

தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல்- தமிழக தேர்தல் அதிகாரி

ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு தற்போது தேர்தல் இல்லை

வழக்கு நிலுவையில் உள்ளதால் 3 தொகுதிகளுக்கு தேர்தல் இல்லை- தேர்தல் அதிகாரி

6:21 PM, 10 Mar

4 மாநில சட்டமன்ற தேர்தல் லோக்சபா தேர்தலுடன் சேர்ந்து நடக்கும்

அந்தந்த மாநில லோக்சபா தேர்தலுடன் 4 மாநில சட்டமன்ற தேர்தல் நடக்கும்

அருணாசலப்பிரதேசம், சிக்கிம், ஆந்திரா பிரதேசம், ஒடிசாவில் சட்டசபை தேர்தல்

ஜம்மு காஷ்மீரில் தற்போது சட்டமன்ற தேர்தல் கிடையாது

பாதுகாப்பு கருதி லோக்சபா தேர்தல் மட்டுமே காஷ்மீரில் நடக்கும்

6:05 PM, 10 Mar

தமிழகத்தில் 21 சட்டசபை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18ம் தேதி இடைத்தேர்தல்

லோக்சபா தேர்தலோடு சேர்த்து இடைத்தேர்தல் நடக்கும்

5:58 PM, 10 Mar

இரண்டாம் கட்ட வாக்குபதிவில் அசாம், பீகார், சட்டீஸ்கர்

காஷ்மீர், கர்நாடகா, மஹாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிசா

தமிழ்நாடு, திரிபுரா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம்,

புதுவை ஆகிய இடங்களில் வாக்குபதிவு நடக்கும்

5:55 PM, 10 Mar

முதற்கட்ட வாக்குப்பதிவு: ஆந்திரா, அருணாசலப்பிரதேசம், அசாம், பீகார், சட்டீஸ்கர், காஷ்மீர்

மஹாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, ஒடிசா

சிக்கிம், தெலங்கானா, திரிபுரா, உத்தர காண்ட், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம்

அந்தமான், லட்சத்தீவு ஆகிய இடங்களில் நடக்கும்

5:54 PM, 10 Mar

தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்குகிறது

மனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 26

வேட்பு மனுக்கள் பரிசீலனை மார்ச் 27

வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் 29ம் தேதி

5:51 PM, 10 Mar

புதுவையிலும் ஏப்ரல் 18ம் தேதியே தேர்தல் நடக்கும்
5:51 PM, 10 Mar

முதல் கட்ட தேர்தல் - 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகள்

2 -ம் கட்ட தேர்தல் -13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகள்

3 -ம் கட்ட தேர்தல் -14 மாநிலங்களில் உள்ள 115 தொகுதிகள்

4 -ம் கட்ட தேர்தல் - 9 மாநிலங்களில் உள்ள 71 தொகுதிகள்

5:41 PM, 10 Mar

தமிழ்நாடு ஒரே கட்டமாக தேர்தல் நடக்கும்

தமிழகத்திற்கு ஏப்ரல் 18ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறும்

5:39 PM, 10 Mar

முதற்கட்ட வாக்குப்பதிவு 20 மாநிலங்களில் நடக்கும்
5:38 PM, 10 Mar

லோக்சபா 4ம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 29

லோக்சபா 5ம் கட்ட வாக்குப் பதிவு மே 6

லோக்சபா 6ம் கட்ட வாக்குப் பதிவு மே 12

லோக்சபா 7ம் கட்ட வாக்குப் பதிவு மே 19

5:37 PM, 10 Mar

மக்களவை தேர்தல் முடிவுகள் மே 23ல் வெளியாகும்
5:35 PM, 10 Mar

லோக்சபா 2ம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 18

லோக்சபா 3ம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 23

5:34 PM, 10 Mar

முதல் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 11ம் தேதி நடைபெறும்

தேர்தல் முடிவுகள் மே 23ம் தேதி அறிவிக்கப்படும் - தேர்தல் ஆணையர்

5:32 PM, 10 Mar

லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் - தேர்தல் ஆணையர்
5:31 PM, 10 Mar

அரசியல் விளம்பரங்களை இணையத்தில் வெளியிட அனுமதி பெற வேண்டும் - தேர்தல் ஆணையர்

சமூக வலைத்தளமும் கண்காணிப்பில் கீழ் வரும் - தேர்தல் ஆணையர்

சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்யவும் அனுமதி வாங்க வேண்டும் - தேர்தல் ஆணையர்

5:30 PM, 10 Mar

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிப்பெருக்கி வைக்கக்கூடாது - தேர்தல் ஆணையர்

வாக்கு எந்திரங்களை இடம்மாற்றுவது ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படும் - தேர்தல் ஆணையர்

5:28 PM, 10 Mar

தேர்தல் விதிமுறை மீறல் குறித்து மக்களே புகார் அளிக்கலாம் - சுனில் அரோரா

தேர்தல் ஆணைய ஆப் மூலம் மக்கள் புகார் அளிக்கலாம் - சுனில் அரோரா

ஸ்மார்ட் போன் மூலம் எடுக்கும் வீடியோ, புகைப்படங்களை அனுப்பலாம் - சுனில் அரோரா

5:26 PM, 10 Mar

நாடாளுமன்றத் தேர்தலில் 17.4 லட்சம் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன

அனைத்து பூத்களிலும் விவிபாட் பயன்படுத்தப்படும் - சுனில் அரோரா

அனைத்து கட்டத்திலும் தேர்தல் நடவடிக்கை பார்வையாளர்கள் இருப்பார்கள்- சுனில் அரோரா

மாற்றுத்திறனாளிகளுக்காக தனி ஆப் உருவாக்கப்படும் - சுனில் அரோரா

5:24 PM, 10 Mar

10 லட்சம் காவல்நிலையங்கள் தேர்தல் ஆணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன - சுனில் அரோரா

மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன - சுனில் அரோரா

5:23 PM, 10 Mar

பிரச்சனைக்குரிய வாக்குசாவடிகளில் சிசிடிவி பொருத்தப்படும் - சுனில் அரோரா

வாக்கு எந்திரத்தில் வேட்பாளர்களின் புகைப்படங்கள் இந்தமுறை இடம்பெறும் - சுனில் அரோரா

5:23 PM, 10 Mar

மக்கள் அச்சமின்றி வாக்களிக்க பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளிப்பார்கள் - சுனில் அரோரா

தேர்தலை பாதுகாப்பாக நடத்த சிஆர்பிஎப் வீரர்கள் பயன்படுத்தப்படுவார்கள் - சுனில் அரோரா

5:19 PM, 10 Mar

வாக்களிக்க தேர்தல் ஆணையம் தரும் பூத் ஸ்லிப் மட்டும் போதாது

வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட நிர்ணயிக்கப்பட்ட ஆவணங்களில் ஒன்றை கட்டாயம் காட்ட வேண்டும்

நாடு முழுவதும் 10 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன

5:18 PM, 10 Mar

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது - சுனில் அரோரா
5:18 PM, 10 Mar

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது - சுனில் அரோரா
5:17 PM, 10 Mar

யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் விவிபாட் எந்திரம் பயன்படுத்தப்படும் - சுனில் அரோரா

பூத் ஸ்லிப் மூலம் வாக்களிக்க முடியாது - சுனில் அரோரா

5:16 PM, 10 Mar

வேட்புமனு தாக்கல் நடைபெறும் கடைசி நாள்வரை வாக்காளர் பட்டியல்கள் திருத்தம் நடைபெறும்
5:15 PM, 10 Mar

புதிதாக 8.43 கோடி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்

18 முதல் 19 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை ஒன்றரை கோடி பேர்

மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 90 கோடி

5:15 PM, 10 Mar

மொத்தம் 90 கோடி வாக்காளர்கள் இந்த முறை வாக்களிக்க தகுதியானவர்கள் - சுனில் அரோரா
5:13 PM, 10 Mar

23 மாநிலங்களில் 100% வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு இருக்கிறது - சுனில் அரோரா

15 கோடி புதிய வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர் - சுனில் அரோரா

கடந்த தேர்தலில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளே இப்போதும் கடைபிடிக்கப்படும் - சுனில் அரோரா

READ MORE

Lok Sabha Elections 2019 Date Schedule Live Updates: ECI will announce it in few hours

English summary
Lok Sabha Elections 2019 Date Schedule: Election Commission of India will announce the Lok Sabha elections date today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X