3-ம் கட்ட தேர்தல்.. ஓட்டு பதிவு முடிந்து 4 நாட்களுக்கு பிறகு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்ட EC
டெல்லி: 3 ஆம் கட்ட லோக்சபா தேர்தலில், 65.68 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. கடந்த 7 ஆம் தேதி குஜராத் உள்பட 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 93 தொகுதிகளுக்கு நடந்த ஓட்டுப்பதிவில் 65.68 சதவீத பேர் வாக்கு அளித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் 18வது லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் 3 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்னும் 4 கட்ட தேர்தல் நடைபெற இருக்கிறது. முதல் கட்ட தேர்தல் முடிவு கடந்த மாதம் 19 ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் 26 ஆம் தேதியும் நடந்து முடிந்தது. மூன்றாம் கட்ட தேர்தல் கடந்த 7 ஆம் தேதி நடந்து முடிந்தது.

இந்த நிலையில் முதல் 2 கட்ட தேர்தல்களில் பதிவான வாக்கு சதவிகிதம் முறையே, 66.14% மற்றும் இரண்டாம் கட்டத்திற்கு 66.71% என தேர்தல் ஆணையம் அறிவித்தது. எனினும் முதல் கட்ட வாக்குப்பதிவின் வாக்கு சதவிகிதம் 10 நாட்களுக்குப் பிறகுதான் வெளியிடப்பட்டது. இதேபோல் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவின் வாக்கு சதவிகிதம் 4 நாட்களுக்குப் பிறகுதான் அறிவிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. வாக்காளர்களின் வாக்குப் பதிவு விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையம் இவ்வளவு தாமதம் செய்தது ஏன்? என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியிருந்தார். ஆனால் அதற்கு தேர்தல் ஆணையம் சரிவர பதில் அளிக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறியிருந்தன.
பொதுவாக லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்கள் நடந்து முடியும் நாளிலேயே வாக்கு சதவீதம் எவ்வளவு பதிவானது என்பது தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படும். பின்னர் அதற்கு அடுத்த நாள் இறுதிக்கட்டமாக வாக்கு சதவிகிதம் எவ்வளவு என்பதை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.
ஆனால் தற்போது நடக்கும் லோக்சபா தேர்தலில் பதிவாகும் வாக்கு சதவிகிதம் குறித்த இறுதி விபரங்களை அறிவிப்பதில் தாமதம் ஏற்படுகிறது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. இந்த நிலையில், கடந்த 7 ஆம் தேதி 3 ஆம் கட்டமாக நடந்த லோக்சபா தேர்தலில் பதிவான வாக்கு சதவிகிதம் எவ்வளவு என்பதை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
3 ஆம் கட்ட லோக்சபா தேர்தலில், 65.68 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 66.89 சதவீத ஆண்களும், 64.41 சதவீத பெண்களும், 3 ஆம் பாலினத்தவர் 25.2 சதவீதம் பேர் என மொத்தம் 65.68 சதவீதம் பேர் ஓட்டுப் போட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
கடந்த 7 ஆம் தேதி குஜராத் உள்பட 11 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 தொகுதிகளுக்கு நடந்த வாக்குப்பதிவில் பதிவான வாக்கு சதவிகிதம் 66.58 என்று தேர்தல் நடந்து 4 நாட்கள் கழித்து தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications