Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2 நாளில் கெஜ்ரிவால் கைது? ஆம்ஆத்மி-காங்கிரஸ் தொகுதி பங்கீட்டால் ED பிளான்.. பகீர் கிளப்பிய தலைவர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி டெல்லியில் ஆம்ஆத்மி-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு சுமுகமாக முடிவடைந்துள்ளது. இது பாஜகவுக்கு பிரச்சனையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இத்தகைய சூழலில் தான் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கைது செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக ஆம்ஆத்மி கட்சி பரபரப்பை கிளப்பி உள்ளது.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜகவை தோற்கடிக்கும் நோக்கத்தில் 26 கட்சிகள் இணைந்து ‛இந்தியா' கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டணியில் காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகள் உள்ளன. இருப்பினும் பஞ்சாப்பில் ஆம்ஆத்மி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. மாறாக பிற மாநிலங்களில் ஆம்ஆத்மி- காங்கிரஸ் கூட்டணிக்கு முடிவு செய்துள்ளன.

Lok Sabha Election 2024: Arvind Kejriwal would be arrested in 2 or 3 days due to congress alliance, says AAP leader Saurabh Bhardwaj

இதுதொடர்பான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில் தற்போது தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை என்பது முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி டெல்லி, கோவா, குஜராத் மாநிலங்களில் ஆம்ஆத்மி - காங்கிரஸ் கட்சிகள் தொகுதி பங்கீடு செய்துள்ளனர்.

டெல்லியை பொறுத்தமட்டில் மொத்தம் 7 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் 7 தொகுதிகளிலும் பாஜக தான் வென்றது. மீண்டும் அந்த தொகுதிகளை தக்கவைக்க பாஜக முயற்சி மேற்கொண்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் டெல்லியில் 4 தொகுதிகளில் ஆம்ஆத்மியும், 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியும் போட்டியிட முடிவு செய்யப்பட்டு தொகுதி பங்கீடு முடிந்துள்ளது.

Lok Sabha Election 2024: Arvind Kejriwal would be arrested in 2 or 3 days due to congress alliance, says AAP leader Saurabh Bhardwaj

அதேபோல் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் மொத்தம் 26 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த 2014 மற்றும் 2019 தேர்தல்களில் பாஜக அனைத்து இடங்களிலும் வென்றன. தற்போது அங்கு ஆம்ஆத்மி கட்சி வளர்ந்து வருகிறது. இதையடுத்து காங்கிரஸ்-ஆம்ஆத்மி குஜராத்தில் தொகுதி பங்கீடு செய்துள்ளது. ஆம்ஆத்மி கட்சிக்கு 2 தொகுதிகளிலும், காங்கிரஸ் 24 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளது. மேலும் ஹரியானாவில் மொத்தம் 10 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் ஆம்ஆத்மிக்கு ஒரு தொகுதியிலும், காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாகவும், கோவாவிலும் இருகட்சிகள் இடையே கூட்டணி முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ்-ஆம்ஆத்மி கூட்டணி அமையாது என பலரும் தெரிவித்தனர். ஆனால் தற்போது தொகுதி பங்கீடு பல மாநிலங்களில் சுமூகமாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ஆம்ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட உள்ளதாக அந்த கட்சியின் தலைவர் சவுரப் பரத்வாஜ் பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:

வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தால் அடுத்த 2 அல்லது 3 நாட்களில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என்ற தகவல் எங்களுக்கு கிடைத்தது. ஆனால் நாங்கள் அமலாக்கத்துறையை பார்த்து பயப்படவில்லை. அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்வதற்கான நோட்டீஸ் என்பது இன்று மாலை அல்லது நாளையில் வழங்கப்படும்.

காங்கிரஸ்-ஆம்ஆத்மி கூட்டணி அமைத்துள்ளதால் பாஜக பிரச்சனையை சந்திக்கும். 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற இலக்கு நிர்ணயம் செய்து தோல்வி பயத்தில் பாஜக உள்ளது. பயம் இல்லாவிட்டால் ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் வீட்டில் சிபிஐ-யை வைத்து சோதனை செய்யமாட்டார்கள். ஆனால் சோதனை நடந்துள்ளது.

அதேபோல் ஆம் ஆத்மி கட்சி எம்பியும், கட்சியின் பொதுச் செயலாளருமான சந்தீப் பதக் கூறுகையில், ‛‛பாஜக தனத அரசியல் வியூகத்தை மறுவடிவமைப்பு செய்துள்ளது. ஆம்ஆத்மி-காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளதால் அந்த கட்சி வருத்தத்தில் உள்ளது. அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் நோட்டீஸ் வேலை செய்யவில்லை. இதனால் அவரை கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டால் சுனாமி போன்ற கொந்தளிப்பு ஏற்படும்'' என தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஆம்ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இதில் ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதுபற்றி சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா உள்பட ஆம்ஆத்மி எம்பி, பிரமுகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணைக்கு சிபிஐ முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகி இருந்தார். ஆனால் அவர் அமலாக்கத்துறை விசாரணையை புறக்கணித்து வருகிறார்.

6 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் இருக்கிறார். இந்நிலையில் தான் பிப்ரவரி மாதம் 26ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பி உள்ளது. இதற்கிடையே தான் நேற்று டெல்லி, கோவா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஆம்ஆத்மி-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+