‛அட்வைஸ் + வார்னிங்’.. இதை மட்டும் செய்யாதீங்க! 12 மணிநேரம் அமைச்சர்களுக்கு பாடமெடுத்த பிரதமர் மோடி
டெல்லி: விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் நடந்தது. சுமார் 12 மணிநேரம் இந்த கூட்டம் நடந்தது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் பிரதமர் மோடி அமைச்சர்களை எச்சரித்ததோடு, முக்கிய அட்வைஸ்களை வழங்கினர். இந்த கூட்டத்தில் என்ன நடந்தது? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. வரும் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று மத்தியில் 3வது முறையாக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக திட்டமிட்டு வருகிறது. நடைபெற உள்ள தேர்தலில் பாஜக 370 இடங்களிலும், பாஜக கூட்டணி 400க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்துள்ளது.

மேலும் பாஜக சார்பில் வரும் தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களை கண்டறிந்து ஒவ்வொரு தொகுதிக்கும் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பாஜக சார்பில் தொகுதி வாரியாக சர்வே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் நேற்று முதற்கட்டமாக பாஜக சார்பில் 195 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
மொத்தம் 35 மத்திய அமைச்சர்களின் பெயர்கள் முதற்கட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளது. பிரதமர் மோடி வாரணாசி தொகுதியிலும், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் லக்னோவிலும், அமித்ஷா காந்தி நகர் தொகுதியிலும் களமிறங்கி உள்ளனர். இனி அடுத்தடுத்து பாஜக சார்பில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இத்தகைய சூழலில் தான் இன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் குழுவின் கூட்டம் நடந்தது.

வரும் நாடாளுமன்ற தேர்தலை சிறப்பாக எதிர்கொள்வது எப்படி? அடுத்த 5 ஆண்டுக்கான விரிவான செயல் திட்டங்களை இறுதி செய்வது பற்றி விவாதிக்கப்பட்டது. இந்த சமயத்தில் பிரதமர் மோடி பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளார். பொதுக்கூட்டங்களிலும், டிவி சேனல்களிலும் பேசும்போது கவனமாக செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிக்க கூடாது. விவாதங்கள் மற்றும் மேடை பேச்சுகளில் நிதானத்தையும், கண்ணியத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்.
மேலும் தற்போதைய தொழில்நுட்பம் எப்படி ஆபத்தான ஒன்றாக மாறி உள்ளது என்பது பற்றியும் அவர் எச்சரித்தார். அதாவது குரல்களை எடிட் செய்யும் தொழில்நுட்பம், டீப் பேக் வீடியோ தொழில்நுட்பங்கள் இருப்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இது கட்சிக்கும், தனிநபருக்கும் களங்கத்தை ஏற்படுத்தி விடும். இதனால் மிகவும் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும் என மோடி அட்வைஸ் செய்தார்.
இந்த ஆலோசனை கூட்டம் என்பது 12 மணிநேரம் வரை நடந்துள்ளது. காஷ்மீர் முதல் தமிழ்நாடு வாரியாக தேர்தலை அணுகுவது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 2047 ல் இந்தியாவை வல்லரசாக்க அடுத்த 5 ஆண்டில் மேற்கொள்ள வேண்டிய செயல் திட்டம் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி தேர்தல் பிரசாரங்களில் அரசின் திட்டங்கள், கொள்கைகள் பற்றி எடுத்து கூற வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.
மேலும் மே மாதம் புதிதாக ஆட்சியை பிடித்தவுடன் முதல் 100 நாளில் செயல்படுத்த வேண்டிய செயல் திட்டங்களை தயார் செய்ய அறிவுறுத்தினார். இந்த வேளையில் பல்வேறு அமைச்சர்கள் தங்களது அமைச்சகம் சார்ந்த செயல் திட்டங்களை சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications