இத்தனை சோதனையா? பாஜக சீட் தராத கோபம்- மாஜி மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அரசியலுக்கே முழுக்கு!
டெல்லி: லோக்சபா தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் கடும் அதிருப்தி அடைந்த முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன், ஒட்டுமொத்தமாக அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அத்துடன் தாம் மீண்டும் மருத்துவ சேவைக்கே திரும்புவதாகவும் டாக்டர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக நேற்று அறிவித்தது. ஏற்கனவே சமாஜ்வாதி கட்சி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்டவை வேட்பாளர்களை அறிவித்திருக்கின்றன.

பாஜகவோ 195 லோக்சபா தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை முதல் கட்டமாக அறிவித்தது. இதனால் அத்தனை பார்வைகளும் பாஜக பக்கம் திரும்பியது. முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் பிரதமர் மோடி (வாரணாசி), அமித்ஷா (காந்தி நகர்), ராஜ்நாத் சிங் (லக்னோ) தொகுதிகளில் போட்டியிடுவர் என அறிவிக்கப்பட்டது. உபி, மேற்கு வங்கம், ராஜஸ்தான், கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் லோக்சபா தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் அன்சோல் தொகுதியில் போஜ்புரி (போஜ்பூரி) நடிகர் பவன் சிங் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் மேற்கு வங்க மாநிலப் பெண்கள் குறித்த படங்கள், கருத்துகளால் பவன் சிங், வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனேயே கடும் எதிர்ப்பை எதிர்கொண்டார். இதனால் லோக்சபா தேர்தலிலேயே தாம் போட்டியிடவில்லை என அறிவித்துவிட்டார் பவன் சிங்.
இதனைத் தொடர்ந்து தற்போது முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன், தமக்கு டெல்லியில் போட்டியிட சீட் கிடைக்காத அதிருப்தியில் அரசியலில் இருந்தே விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் தாம் தமது மருத்துவ துறைக்கே திரும்புவதாகவும் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ள டாக்டர் ஹர்ஷ்வர்தன், இதுவரையில் தாம் பணியாற்ற வாய்ப்பு தந்த பிரதமர் மோடி மற்றும் பாஜக தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 30 ஆண்டுகால தேர்தல் அரசியலில் போட்டியிட்ட 5 சட்டசபை தொகுதி தேர்தல்களிலும் வெற்றி பெற்றேன். 2 லோக்சபா தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். தேர்தல்களில் பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளேன். அரசாங்கத்திலும் கட்சியிலும் கவுரவமான பதவிகள் கொடுக்கப்பட்டன. நான் என்னுடைய மருத்துவ சேவைகள் துறைக்கே திரும்புகிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதென்னடா சோதனை மேல் சோதனை!
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications