9வது கட்ட வேட்பாளர் லிஸ்ட்டை வெளியிட்ட காங்கிரஸ்.. 2 தொகுதிகளில் வேட்பாளர்கள் மாற்றம்.. காரணம் என்ன?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா தேர்தலுக்கான 9- வது கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது. கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.

லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 01 ஆம் தேதி வரை நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தலில் தமிழகம் உள்பட 21 மாநிலலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது. தேர்தலுக்கன வேட்பு மனு தாக்கல் முடிந்த நிலையில், வேட்பு மனு மீதான பரிசீலனை நாளை நடைபெற உள்ளது. அதேபோல், 2-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது.

Lok Sabha Election 2024 Congress Announces 9 th candidate list Three More Candidates from Karnataka Including Ballari

தேர்தல் ஜூரம் நாடு முழுவதும் தொற்றியுள்ள நிலையில், அடுத்தடுத்து, வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் வியூகம் என அரசியல் கட்சிகள் படு பிசியாக உள்ளன. மத்தியில் ஆளும் பாஜக 400 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்ற இலக்குடன் தேர்தல் வியூகம் வகுத்து வருகிறது. பல்வேறு தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியும் படிப்படியாக வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில், 9-வது கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது. கர்நாட்கா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் ரிலீஸ் செய்துள்ளது.

இதன்படி, கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி தொகுதிக்கு E. துகாரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சம்ராஜ்நகர் தொகுதிக்கு சுனில் போசும், சிக்பல்லபூர் தொகுதிக்கு ரக்‌ஷா ராமையாவும் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தானில் இரண்டு தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் மாற்றம் செயய்ப்பட்டுள்ளனர். ரஜ்ஸ்மண்ட் தொகுதிக்கு சுதர்ஷன ராவத் வேட்பாளாரக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது தாமோதர் குஜ்ஜார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பில்வாரா தொகுதிக்கு தாமோதர் குஜாருகு பதிலாக சிபிசி ஜோஷி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக நேற்று முன் தினம் வெளியான 8-வது கட்ட வேட்பாளர் பட்டியலில் ராஜஸ்மண்ட் தொகுதிக்கு சுதர்ஷன் ராவத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், தனக்கு தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்றும் இதுகுறித்து பலமுறை தலைமைக்கு தெரிவித்து விட்ட போதிலும் தனது பெயர் லிஸ்டில் வந்துள்ளது.

எனக்கே இது ஆச்சர்யமாக உள்ளது. நான் தேர்தலில் போட்டியிட வில்லை என்று சுதர்ஷன ராவத் கூறினார். இதையடுத்து, அந்த தொகுதியில் புதிய வேட்பாளராக பில்வரா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்த தாமோதர் குஜ்ஜார் அறிவிக்கப்பட்டுள்ளார். பில்வாரா தொகுதிக்கு சிபி ஜோஷி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+