வாக்கு சதவிகிதம் வெளியாக 11 நாட்களா? தேர்தல் ஆணையத்திடம் நேரில் முறையிட்ட ‘இந்தியா கூட்டணி’தலைவர்கள்
டெல்லி: அபிஷேக் சிங்வி தலைமையில் இந்தியா கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்தனர். இதில், வாக்கு சதவிகிதம் வெளியாக 11 நாட்களா? என்றும், வாக்கு சதவிகிதம் எண்ணிக்கையை உடனடியாக வெளியிட்டால் யூகங்களுக்கு வழி வகுக்காது என்றும் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் ஆணைய அதிகாரிகளை இந்தியா கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று சந்தித்து பேசினர். அபிஷேக் சிங்வி தலைமையில் எதிர்க்கட்சி பிரதிதிகள் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்தனர். இந்த சந்திப்பு 45 நிமிடங்கள் வரை நீடித்தது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அபிஷேக் சிங்வி கூறியதாவது:-

தேர்தல் ஆணைய அதிகரிகளை சந்தித்து எங்கள் ஆட்சேபங்களை தெரிவித்தோம். முக்கியமான பிரச்சினை என்னவென்றால், வாக்குசதவிகித்தை வெளியிட 11 நாட்கள் தாமதம் இருக்க கூடாது. இதில் அதிக கவலை அளிப்பது என்னவென்றால் வாக்கு சதவிகிதம் அதிகரிப்பதுதான்.. 2019 ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது இதுபோன்ற உயர்வு இல்லை.
வாக்கு சதவிகிதம் எண்ணிக்கையை உடனடியாக வெளியிட்டால் யூகங்களுக்கு வழி வகுக்காது. பிரதமர் மோடிக்கு எதிராக நாங்கள் 11 புகார்களை அளித்துள்ளோம். ஆனால் ஒரு நடவடிக்கை கூட எடுத்தது இல்லை. எனவே, இதில் விரைவான பதில் தேவை" என்றார்.
முன்னதாக இன்று மல்லிகார்ஜுன கார்கேவிற்கு தேர்தல் ஆணையம் கடிதம் ஒன்றை எழுதியிருந்தது. அதில், அதாவது, லோக்சபா தேர்தல் இறுதி வாக்குப்பதிவு சதவிகித முரண்பாடுகள் பற்றி எதிர்க்கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இது தொடர்பாக 5 பக்க கடிதம் ஒன்றை மல்லிகார்ஜுன கார்கேவிற்கு தேர்தல் ஆணையம் எழுதியது.
அதில், தேர்தல் வாக்குப்பதிவுகளை வெளியிடுவதில் தாமதமும், முரண்பாடுகளும் உள்ளது என்ற மல்லிகார்ஜுன கார்கேவின் குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் நிராகரித்து இருந்தது. மேலும், "எதிர்க்கட்சித் தலைவரின் கருத்து, விரும்பத்தகாதது, ஆதாரமற்றது, குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பாரபட்சமான தகவல்களை உருவாக்கும் முயற்சி" என்றும் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.












Click it and Unblock the Notifications