2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு.. பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது
டெல்லி: 2 ஆம் கட்ட லோக்சபா தேர்தல் கேரளா, கர்நாடகா உள்பட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் நடக்கிறது. இந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிராசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்கிறது. இதனால் இறுதி கட்ட பிரசாரத்தில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் கடந்த 19 ஆம் தேதி 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு நடைபெற்றது. இதில், தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் 65.54 சதவிகித வாக்குகள் பதிவாகின.

முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலுக்கு அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிராசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்கிறது. இதனால் இறுதி கட்ட பிரசாரத்தில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
கேரளா (20 தொகுதிகள்), ராஜஸ்தான் (13), மகாராஷ்டிரா (08), அசாம் (05), சத்தீஸ்கர் (03), கர்நாடகம் (14), உத்தர பிரதேசம் (08), மத்திய பிரதேசம் (07), பீகார் (05), மேற்கு வங்கம் (03), மணிப்பூர் (01), திரிபுரா (01), ஜம்மு காஷ்மீர் (01) என மொத்தம் 89 தொகுதிகளுக்கு வரும் 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அதேபோல் திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூர் போட்டியிடுகிறார். அதேபோல் கர்நாடாகவில் உள்ள பெங்களூர் தெற்கு, பெங்களூர் வடக்கு, மத்திய பெங்களூர், பெங்களூர் புறநகர், கோலார், சிக்பள்ளாப்பூர், துமகூரு, சித்ரதுர்கா, ஹாசன், உடுப்பி- சிக்கமகளூரு, தட்சிண கன்னடா, மைசூரு, மண்டியா, சாம்ராஜ்நகர் ஆகிய 14 தொகுதிகளில் 26 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
கர்நாடகத்தை பொறுத்தவரையில் பாஜக - ஜனதா தளம் (எஸ்) கூட்டணிக்கும், காங்கிரசுக்கும் இடையே இருமுனை போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் தனித்து களம் காண்கிறது. இந்த தொகுதிகளில் முக்கியமாக பெங்களூர் வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக மத்திய அமைச்சர் ஷோபா, மண்டியாவில் ஜனதா தளம் (எஸ்) வேட்பாளராக குமாரசாமி,
பெங்களூர் தெற்கில் பாஜக வேட்பாளராக அக்கட்சியின் தேசிய இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூர்யா, பெங்களூர் புறநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரின் சகோதரர் டி.கே. சுரேஷ் எம்பி, ஹாசனில் ஜனதா தளம் (எஸ்) வேட்பாளராக முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எம்பி., மைசூருவில் பா.ஜனதா வேட்பாளராக மன்னர் யதுவீர் உடையார் ஆகியோர் களத்தில் உள்ளனர். மொத்தம் 247 வேட்பாளர்கள் போட்டியில் இருக்கிறார்கள்.
இரண்டாம் கட்ட தேர்தலுக்காக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வதால் இறுதி கட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது.
மாலை 5 மணிக்கு மேல் வெளிநபர்கள் தொகுதியில் தங்க அனுமதி அளிக்கப்படாது. இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 26 ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் தயார் செய்துள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
இட்லி, வடை, சாம்பார்.. கர்நாடகாவில் நாளை நடக்கும் மிக பெரிய அரசியல் மாற்றம்! ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
ED கார் கண்ணாடி உடைப்பு.. சுற்றி வளைத்த தொண்டர்கள்.. பினராயி ரெய்டை முடித்தபோது வெடித்த பூகம்பம் -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக்












Click it and Unblock the Notifications