வெற்றி எங்களுக்குத்தான்.. 100 கிலோ லட்டுக்கு ஆர்டர் கொடுத்து.. கொண்டாட காத்திருக்கும் காங்கிரஸ்
போபால்: பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி கடந்த இரண்டு தேர்தல்களை போல அல்லாமல், இம்முறை டபுள் டிஜிட்டில் வெல்லும் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் பட்வாரி கூறியுள்ளார். மேலும் இந்த வெற்றியை கொண்டாட காங்கிரஸ் கட்சி 100 கிலோ லட்டுவிற்கும் ஆர்டர் கொடுத்துள்ளதாம்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்துள்ளது. வரும் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடபெறுகிறது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக நம்பிக்கையுடன் காத்திருக்கிறது.

அதேவேளையில், பாஜகவை விழ்த்தி ஆட்சியை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகள் உள்ளன. இன்று வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாஜக ஹாட்ரிக் வெற்றியை பெறும் என்றே கூறுகின்றன. அதிலும் இந்தியா டுடே உள்ளிட்ட 3 செய்தி நிறுவனங்கள் பாஜகவிற்கு 400 இடங்கள் வரை கிடைக்கும் என்று கணித்துள்ளன.
எக்சிட் போல் கணிப்புகள் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு பெரும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளன. ஆனாலும் கருத்துக் கணிப்புகள் தவறாக அமையும் என்றும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கூறி வருகின்றன.
இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் எப்படியாவது வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் அம்மாநில காங்கிரஸ் தலைமை, வெற்றி கொண்டாட்டத்திற்காக 100 கிலோ லட்டுகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளதாம். கடந்த இரண்டு லோக்சபா தேர்தல்களில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய சரிவை சந்தித்தது.
ஆனால், இந்த முறை வெற்றி பெறுவது உறுதி என காங்கிரஸ் கட்சியினர் உறுதியாக நம்புகின்றனர். அதாவது இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை வைத்துள்ளார். இதனால் வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் அவ்நீஷ் பண்டேலா 100 கிலோ லட்டு ஆர்டர் கொடுத்து வைத்து இருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
வாக்கு எண்ணிக்கை தினத்திலும் உஷாராக இருக்க வேண்டும் என காங்கிரஸ் தலைமை கட்சி முகவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாம். அதேவேளையில் மத்திய பிரதேசத்தில் பாஜக ஆளும் கட்சியாக உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளும் பாஜகவிற்கு சாதகமாகவே களம் உள்ளதை காட்டுகின்றன. இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக மொத்தமுள்ள 29 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவே கணிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கட்சி 28 லிருந்து 29 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், இந்தியா கூட்டணி பூஜ்ஜியத்தில் இருந்து ஒரு தொகுதியில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டிருக்கிறது. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 29 தொகுதிகளில் 28 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது.
-
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக்












Click it and Unblock the Notifications