இன்று மாலை வெளியாகும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்.. காங்கிரஸ் எடுத்த அதிரடி முடிவு
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தொடர்பான ஊடக விவாதங்களில் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு அதாவது, ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு ஊடக விவாதங்களில் பங்கேற்போம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான லோக்சபா தேர்தல் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. 7 கட்டமாக நடைபெறும் லோக்சபா தேர்தலில் 6 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துவிட்டது. இன்று கடைசி மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடக்கிறது. 8 மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. வருகிற 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இதோடு 3 வது முறையாக தொடர்ந்து வெற்றியை பறிக்கும் என்று பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். லோக்சபா தேர்தலையொட்டி கடந்த 3 மாதமாக பிரசாரம் செய்த மோடியும் கூட இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்று கூறி வருகிறார்.
இதேபோல் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களும் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். இன்றுடன் லோக்சபா தேர்தல் முடியும் நிலையில், நேற்று முன்தினமே பிரசாரம் முழுவதுமாக ஓய்ந்துவிட்டது. 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது.
வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் இன்று மாலை லோக்சபா தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்படும். இந்த நிலையில் தான் காங்கிரஸ் கட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தொடர்பான ஊடக விவாதங்களில் காங்கிரஸ் பங்கேற்காது என்று தெரிவித்துள்ளது. ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு ஊடக விவாதங்களில் காங்கிரஸ் பங்கேற்கும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான்












Click it and Unblock the Notifications