டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேர்தல் விதிமீறல்களா… ஆண்ட்ராய்டு ஆப் மூலம் புகார் தெரிவிக்கலாம்

Google Oneindia Tamil News

டெல்லி: தேர்தல் விதிமீறல்கள் குறித்து ஆண்ட்ராய்டு ஆப்-மூலம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று தெரிவித்துள்ள தலைமை தேர்தல் ஆணையருக்கு சுனில் அரோரா: தேர்தல் விதிமீறல்கள் குறித்து தகவல் தெரிவிப்போரது அடையாளம் பாதுகாக்கப்படும் என்றும் நடவடிக்கைகள் செய்தியாக வெளியிடப்படும் எனவும் கூறினார்.

lok sabha elections 2019: Public complaint can be made by Android App on election violations

மேலும், வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ் பொருத்தப்படும். தேர்தல் விதிமுறைகள் மீறல் குறித்து ஸ்மார்ட் போன் மூலம் எடுக்கும் வீடியோ, புகைப்படங்களை அனுப்பலாம்.

பிரச்சனைக்குரிய வாக்குசாவடிகளில் சிசிடிவி பொருத்தப்படும். வாக்கு எந்திரத்தில் வேட்பாளர்களின் புகைப்படங்கள் இந்தமுறை இடம்பெறும் .

லோக்சபா தேர்தல்.. தமிழகத்திற்கு ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு!லோக்சபா தேர்தல்.. தமிழகத்திற்கு ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு!

தேர்தலை அமைதியாக நடத்த மத்திய ரிசர்வ் பாதுகாப்புப்படையினர் அதிக அளவில் குவிக்கப்பட இருக்கின்றனர் அனைத்து கட்டத்திலும் தேர்தல் நடவடிக்கை பார்வையாளர்கள் இருப்பார்கள்.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் விவிபாட் இயந்திரம் இருக்கும். இலவச டோல்பிரீ எண் 1950 மூலம் புதிய வாக்காளர்கள் தங்களது பெயர்களை சரிபார்க்கலாம்.

தேர்தல் ஆணையம் தரும் பூத் சிலிப்பைப் பயன்படுத்தி மட்டும் வாக்களிக்க முடியாது; வாக்களிக்க வேறு ஆவணம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

English summary
Lok Sabha Elections 2019 to be held in 7 phases.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X