விலைவாசி உயர்வு.. விவாதத்திற்கு ஓகே! அவையை முடக்கிய எதிர்க்கட்சிகள்.. இறங்கி வரும் மத்திய அரசு
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடர்ந்து முடங்கி வரும் நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், கடந்த இரு வாரங்களாகவே நாடாளுமன்ற கூட்டத்தொடர் முறையாக நடைபெறவில்லை. இரு அவைகளும் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகிறது.

விலைவாசி உயர்வு
நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக அவர்கள் நாடாளுமன்றத்திலும் பதாகைகளை எடுத்து வந்து முழக்கங்களை எழுப்பி வந்தனர். அவையைச் செயல்பட விடாமல் முடக்கியதாக 4 காங்கிரஸ் எம்பிக்கள் மழைக்கால கூட்டத்தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

அவைகள் முடக்கம்
இருந்த போதிலும் எதிர்க்கட்சியினர் இதை விடாப்பிடியாக வலியுறுத்தி வந்தனர். அவையை முடக்கியதாக திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த மேலும் 19 பேர் வாரம் முழுக்க சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். எதிர்க்கட்சியினர் செயல்பட்டால் தொடர்ச்சியாக இரு வாரங்களாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளுமே முடக்கப்பட்டன.

விளக்கம்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் நாடாளுமன்றத்திற்குத் திரும்பியதும் விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடத்தத் தயாராக உள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கடந்த வாரம் மக்களவையில் தெரிவித்திருந்தார். நிர்மலா சீதாராமன் அவைக்குத் திரும்பியதும் உடனடியாக விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளது என்றே அவர் கூறி இருந்தார்.

இறங்கி வரும் மத்திய அரசு
தற்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொரோனாவில் இருந்து பூரணமாகக் குணமடைந்துள்ளார். இரு நாட்களுக்கு முன்பு குடியரசுத் தலைவரை "ராஷ்டிரபத்னி" என்று காங்கிரஸின் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி குறிப்பிட்டது தொடர்பாகக் கூட, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்து இருந்தார். இதனால் விரைவில் விலைவாசி உயர்வு குறித்த விவாதம் நடைபெறும் எனத் தகவல் வெளியானது.

எப்போது
இந்தச் சூழலில் வரும் திங்கள்கிழமை விலைவாசி உயர்வு குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெறும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. முதலில் மக்களவையிலும், அதன் பின்னர் மாநிலங்களவையிலும் விலைவாசி உயர்வு பற்றிய விவாதம் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இந்த விவாதத்திற்குப் பின்னர், அவை சுமுகமாக நடைபெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications